Sunday, January 25, 2009

Slumdog Millionaire - வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”

நான் இந்த படத்தை கணிணியில் பார்த்தேன்.

படத்தின் ஆரம்பமே ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.

போட்டியில் விடைகளை சரியாக சொல்லிக் கொண்டு வந்ததாலேயே ஒருவனை காவல்துறை சித்திரவதை செய்வதும் பின்னர் ஏதும் நடக்காதது போல் மீண்டும் போட்டியில் கலந்து கொள்வதும் சற்றும் ஏற்கும்படியாக இல்லை. காவல்துறை விசாரிப்புகள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் யாவருக்கும் தெரியப்படுத்த படுகிறது.

அப்படியானால் பல கோடிகள் செலவழித்து போட்டி ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கே தமது போட்டியின் தயாரிப்பு முறையில் நம்பிக்கை இல்லையா?

மனித உரிமை கழகங்கள் என்று ஒன்று இருப்பதை கதாசிரியரும் தயாரிப்பாளர்களும் அறியாரா? நமது காவல்துறையினரும் வெற்றி பெற்று வரும் ஒரு அப்பாவியை துன்புறுத்தும் அளவுக்கு ஈவு இரக்கம் அற்ற கொடியவர்களா?

வாழ்க்கையின் அவலங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் அதற்கு எல்லையே கிடையாது.
நிஜங்கள் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தி விடலாம்.

இந்தியாவில் மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லை, வெறும் பணவெறி பிடித்த சிலரின் ஆட்சிதான் நடக்கிறது என்பது போல் சித்தரிக்கப்பட்டிருப்பது மிகவும் அவமானகரமானது ஆகும்.

சிறுவர்களின் அபாரமான நடிப்பு, நல்ல காமிரா, திரைத் தொகுப்பு போன்ற பல தரமான அம்சங்கள் உண்டு. இந்திய படங்களின் ஃபார்முலா காட்சிகளும் உண்டு!

ஆனால் படத்தின் ஆரம்பமே மனதுடன் ஒட்டாததால் ஏதோ ஒரு படம் பார்த்தோம் என்றுதான் தோன்றியது.

இதே தரத்தில் மணிரத்தினம் மகேஷ்பட் ஷ்யாம்பெனகல் போன்றவர்கள் எடுக்கக் கூடியவர்கள்தான். ஆனால் அப்போது இந்த வரவேற்பு இருந்திருக்குமா அல்லது விருதுகள்தான் குவிந்திருக்குமா ?:((

ரஹ்மானின் இசையில் நமக்கு எதுவும் புதுமை தெரியவில்லை. (கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை ?) ஒரு வேளை வெள்ளைக்காரர்களுக்கு புதிதாக இருக்குமோ என்னமோ ? வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”


surveyசனின் இடுகைக்கு பின்னூட்டமாக எழுதி, நீளம் காரணமாக தனிப்பதிவானது :)

8 comments:

sa said...

சற்று முன் தான் SAG அவார்ட்ஸ் பார்த்தேன். அதிலும் best cast in motion picture category இல் அவார்ட் கிடைத்துள்ளது. தாங்கள் கூரியது போல வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”. அருமையான் பதிவு www.newspaanai.com இல் சேர்க்கவும். www,newpaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட். நன்றி

துளசி கோபால் said...

எப்படிங்க இப்படி!!!!

இங்கே வந்துருந்தீங்களா என்ன?

நான் கோபால்கிட்டே புலம்புனதை அப்படியே சொல்லிட்டீங்களே!!!

அந்த 'சீன்' ரொம்பவே அருவருப்பா இருந்துச்சு.

எல்லாரும் ஒஹோ ஆஹான்னு சொல்லும்போது வாயைத் திறக்காமல் இருப்பது உத்தமம்னு எனக்குத் தோணுச்சு.

எம்பரர்'ஸ் க்ளோத்ஸ் நினைவுதான்.

வெள்ளைக்காரனுக்கு இந்தியாவைக் காமிக்கணுமுன்னா..... வேற ஏதும் நல்லது நினைவுக்கு வராது. மிகைப் படுத்துனமுன்னா..... (-:

வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரன். அவன் சொன்னால் சரியாத்தான் இருக்கும்.

KABEER ANBAN said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி viji.
தாங்கள் குறிப்பிட்ட newspannai தளத்தை பார்த்தேன். Tamilish போலவே இருக்கிறது. தமிழ்மணம் போல ping வசதி இல்லாததால் ஒவ்வொருமுறையும் இவ்வகை தளங்களில் Log-in செய்ய வேண்டிருக்கிறது. இதை எளிமைப்படுத்த முயன்றால் பலருக்கும் பிடிக்கும் எனக் கருதுகிறேன். தகவலுக்கு நன்றி

KABEER ANBAN said...

வாங்க துளசி மேடம்.

//அந்த 'சீன்' ரொம்பவே அருவருப்பா இருந்துச்சு //

அதனாலத்தான் அதைப்பத்தி குறிப்பிடக்கூட விரும்பவில்லை.

//எம்பரர்'ஸ் க்ளோத்ஸ் நினைவுதான்//

என்னை ’விவரம் புரியாத’ குழந்தைன்னு சொல்லிட்டீங்க. :))))

கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

SurveySan said...

padam kandippaa nalla padam dhaan. neenga sonna matra vishayangalil enakkum udanpaadu undu.

idhukku badhila en padhivil ulla sila vaakkiyangal keezhe ;)

-----
முன்னரெல்லாம், இந்த மாதிரி படங்களிலோ டாக்குமெண்ட்ரிக்களிலோ, இந்தியாவின் அழுக்கை அப்பட்டமா வெளிச்சம் போட்டு காட்டுவதை பாக்கும்போது, செம கடுப்பு வரும். ஏண்டா இந்த மாதிரி நெகடிவ் பப்ளிசிட்டி தரீங்க. வேர நல்ல விஷயமே கண்ணுல படலையா உங்களுக்குன்ன்னு எரிச்சல் வரும். நம்ம சாக்கடைகளை வெளியில் காட்டி இவனுங்க பணம் சம்பாதிச்சுக்கராங்களேன்னு கடுப்பும் வரும்.
ஆனா பாருங்க, இதுதான் உண்மை. இந்தியாவில் 70% இன்னும் இப்படித்தான் இருக்கு.

தலைக்கு மேல் கூரைன்னு சொல்லிக்க ஒரு இத்துப் போன ஓலை குடிசை. குடிசையை ஒட்டியமாதிரி தேங்கி நிற்கும் நாற்றம் நிறைந்த சாக்கடை. குப்பைக் கூளங்களையும் மற்றவர்களின் எச்சில்களையும் குத்திக் கிளறி அதிலிருந்து கிடைக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை விற்று சம்பாதிக்கும் கேவலமான வேலை. அதுவும் இல்லை என்றால், பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டிய கட்டாயம். 70% மக்கள் அடிப்படை வசதி கூட இல்லாம இன்னும் இப்படித்தான இருக்காங்க?
உண்மையை வெளியில் காட்டினா ஏன் கசக்கணும்?

atleast, இந்த அவலங்களை யாராச்சும் வெளியூர் காரன் பாத்து, ஐயோ பாவம், இவங்களுக்கு ஒதவணும்னு களத்தில் எறங்கினான்னா நமக்கு நல்லதுதான். ஏன்னா, உள்ளூர் காரன் ஒருத்தனும் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண மாட்டான்.
---

KABEER ANBAN said...

நன்றி சர்வேசன்

//ஐயோ பாவம், இவங்களுக்கு ஒதவணும்னு களத்தில் எறங்கினான்னா நமக்கு நல்லதுதான். //

இன்றும் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள், பிரச்சனைகள் விசாரித்தால் பலரும் இன்னும் ஏன் அந்த நிலைமையை மாற்ற விரும்பவதில்லை என்பது புரியும்.

வெளியிலிருந்து உதவி கோரி முன்னேறுவோம் என்பது இழுக்கு. அப்படியே வந்தாலும் அவைகள் வழிமாறி பலவகை இடைத் தரகர்களையே போய் சேருகின்றன.

எல்லாவற்றிலும் மேலாக சில அப்பட்டமான உண்மைகளையும் மனம் வலிக்காமல் கலைநயத்தோடு சொல்லுவதிலே தான் கலைஞனின் திறமை உள்ளது.

இந்த படத்தில் அவை வலுவில் திணிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிகின்றன. மிகைப்படுத்தப் பட்டவை என்று சொல்வதை விட ’செயற்கையான’ சேர்க்கைகள் என்று சொல்லலாம். உதாரணம் போலீஸ் டார்சர். தேவையற்ற ஒன்று.

கதாநாயகன் மூலம் ஃபிளாஸ் பாக் யுக்தியில் கதை சொல்ல வைக்க வேண்டுமென்றால் அனில் கபூர் அவனுக்கு முறை தவறி உதவுவதாக ஒரு குற்றச்சாற்று பத்திரிக்கையில் வருவதாகவும் போட்டியின் நிர்வாகக் குழுவினர் அவனை தனியே விசாரிப்பது போலவும் அமைத்திருக்கலாம். அது இயற்கையாகவும் இருந்திருக்கும்.

வெள்ளைக்காரர்கள் தன்னுடைய நாட்டு பிண்ணணியில் எடுத்திருந்தால் கண்டிப்பாக அப்படித்தான் செய்திருப்பார்கள். அப்படி செய்யாது தான் அவர்களுடைய உள் நோக்கு பற்றிய சந்தேகம் ஏற்படுகிறது.

எப்படியோ நம்மவர்களுக்கு அவார்டு கிடைத்தால் போதும் !!
மீண்டும் நன்றி

ஜீவி said...

சந்தேகமே இல்லாமல், விமர்சனம் செய்வது என்பது ஒரு கலை தான்; அதைத் திறம்படச் செய்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

KABEER ANBAN said...

வாங்க ஜீவி ஐயா,

நீங்களும் படத்தை பார்த்து விட்டீர்களா? பாராட்டுகளுக்கு நன்றி