Sunday, November 18, 2012

மலர்கள் ஏற்றிய மத்தாப்பு

இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி.

நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ  தூரத்தில் பிரதான சாலையிலிருந்து விலகி  ஒரு கி.மீ  உட்புறமாக ஒரு கோவில் உண்டு. இறைவியின் பெயர் ஆஷாபுர தேவி. ஜாம்நகர் அரச குடும்பத்தாரால் ஒரு காலத்தில் வணங்கப்பட்டு வந்த தெய்வமாம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று ரிலயன்ஸ் எஸ்ஸார் கம்பெனிகளை சேர்ந்த குடும்பங்கள் அடிக்கடி தரிசனத்திற்கு வருவதுண்டு.இந்த ஆஷாபுரத்தை சுற்றி குடியிருப்பவர்கள் முக்கியமாக பால் வணிகம் செய்பவர்கள்.  எருமைகள் மெஜாரிட்டி, பசுக்கள் மைனாரிட்டி. எளிமையான மக்கள். சராசரிக்கும் குறைவான வாழ்க்கைத்தரம் என்றே சொல்லலாம். தீபாவளியன்று காலை சத்யசாயி சமிதி அன்பர் ஒருவர் தொலைப் பேசியில் ‘ஆஷாபுரத்து அருகே ஜோகாவாத் கிராமத்தில் தீபாவளி கொண்டாடலாம் வருகிறீர்களா’ என்று கேட்டார். சரியாக ஆறு மணிக்கு மாலை மெயின் கேட்டருகே வந்துவிடுங்கள் என்றார்.
மேடும் பள்ளமுமான சாலையில் ஏறி இறங்கி மின்சாரம் இல்லாத ஒரு கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிட வளாகத்தை ஆறேகால் மணிக்குப் போய் சேர்ந்தோம். போய் இறங்கியது நான்கு குடும்பங்கள் , கார் டிக்கி நிறைய பட்டாசு, ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த சுமார் முப்பது நாற்பது சிறுவர் சிறுமியர் இது தான் அங்கே நிலவிய காட்சி. அடுத்த ஒன்றரை மணி நேரம் அந்த குழந்தைகளின் உற்சாகமும் சந்தோஷமும் கொடுத்த மன நிறைவு வேறு எவ்வகையிலும் பெறமுடியாதது.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில படங்கள் இங்கே;


கடைசியாக இனிப்பு தின்பண்டங்கள் வினியோகம். அனைத்துக் குழந்தைகளும் குஜராத்தி மொழியில் கல கலப்பாக பேசிக்கொண்டது மரங்களில் பறவைகள் பேசிக்கொள்வது போல் இருந்தது.

 உங்களுடைய இல்லங்களிலும் குழந்தைகளுடன் தீபாவளியை  மகிழ்ச்சியுடன் கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

4 comments:

கோமதி அரசு said...

கபீரன்பன் நலமா? , உங்கள் தீபாவளி வாழ்த்து கிடைத்தது விழாக்கள் எல்லாம் மிக சிறப்பாய் நடந்தன.
மகன் ஊருக்கு போய் விட்டான்.

மலர்கள் ஏற்றிய மத்தாப்பு தலைப்பே அசத்தல்.
மலர்களின் முகத்தில் பூவாணமாய் சிதறும் சிரிப்புகள் பார்த்தவுடன் எல்லோரும் இப்படி தீபாவளி கொண்டாட வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது.
சந்தோஷோசத்தில் சந்தோஷ்ம் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதுதான். நீங்களும் உங்கள் நண்பரும் எடுத்தமுடிவு மிகவும் நல்ல முடிவு. பறவைகளின் ஒலி ரசித்தமைக்கு மகிழ்ச்சி. சிறந்த தீபாவளி உங்களுக்கு.
தொடந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்.
நன்றி சொல்வதையும் காலம் கடந்து சொல்ல வேண்டியதாகப் போயிற்று.
பொறுத்துக் கொள்ளவும். குடும்பத்தினர் அனைவருடனும் தீபாவளி நல்ல முறையில் கொண்டாடியது கேட்டு மிக்க மகிழ்ச்சி.
//தொடந்து எழுதுங்கள்...//
எனக்கும் ஆசைதான். செய்ய முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி

கோமதி அரசு said...

கபீரன்பன், வாழ்க வளமுடன்.
உங்கள் இந்த பதிவை என் தீபாவளி வாழ்த்து பதிவில் குறப்பிட்டு இருக்கிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

எப்படியோ இந்தப் பதிவைத் தவற விட்டிருக்கேன். அருமையாகக் கொண்டாடி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். இந்த தீபாவளியும் இதே போல் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன். இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.