New Firefox swallows Scribe Fire
ஒவ்வொரு முறை நெருப்பு நரி உலாவியை கணினியில் திறக்கும் போதும் புதிய நரி வந்தாச்சு உள்ளே விடு உள்ளே விடு என்று விடாமல் தொந்தரவு செய்ததால் ஒரு வழியாக வேண்டா வெறுப்பாய் அதை உள்ளே விட்டேன். அதாவது அப்டேட் செய்தேன்
பதிவு உலகு எட்டிப்பார்த்து பலமாதங்கள் ஆகி விட்டபடியால் பல விஷயங்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்டன. அதில் ஒன்று புதிய நரி விழுங்கி இருக்கும் எழுத்து எரி. கடந்த நான்கு வருடங்களாக scribe fire உதவியுடன் தான் பதிவுகள் எழுதி வந்தேன்.
இன்று அதிசயமாய் சில படங்களை வலையேற்றலாம் அன்று அமர்ந்து scribe fire-க்கான பொத்தானை அழுத்தினால் உலாவி அமைதியாக இருக்கிறது. உலாவியை புதிதாக நிறுவி இருப்பதால் பிரச்சனை போல இருக்கிறது, சரி எதற்கும் மீண்டும் ஒரு முறை நிறுவி விடுவோம் என்று அவர்கள் வலைப்பக்கம் போனால் Scribe fire -4 available -download என்ற அறிவிப்பைப் பார்த்து அதையும் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டாயிற்று.Installation complete- restartஎன்று எல்லா சம்பிரதாயங்களும் கடைபிடித்தாயிற்று. அப்படியும் ஏதும் மாற்றம் இல்லை. சரி அங்கேயே ஏதாவது துப்பு கிடைக்குமா என்று scribe Fire வலைதளத்துக்கு மீண்டும் சென்ற பார்த்தபோது அது வேலை செய்வதில்லை என்று பலரும் வைது கொண்டிருப்பது தெரிய வந்ததது.
என்னுடைய வயிற்றெரிச்சல் என்னவென்றால் நான் எழுவதற்காக எடுத்து வைத்திருந்த குறிப்புப் பக்கங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றையும் ஒரு சேர ஏப்பம் விட்டிருக்கிறது :(
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி ........கோடு (code) செய்யும் குற்றமடி
என்று நம்முடைய விதியை நொந்து கொள்ள வேண்டியது தான்.
7 comments:
என்னுடைய வயிற்றெரிச்சல் என்னவென்றால் நான் எழுவதற்காக எடுத்து வைத்திருந்த குறிப்புப் பக்கங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றையும் ஒரு சேர ஏப்பம் விட்டிருக்கிறது :( //
ரொம்பத் தொழில் நுட்பம் தெரியாதது நல்லதுக்கோனு தோணுது இதைப் படிக்கிறசே. ஸ்கைர்ப் ஃபைர் பத்தித் தெரியாது. ஆனாலும் அதிலே பாக் அப் கூடக் கிடையாதா? பாக் அப் இருந்தால் எல்லாத்தையும் மீட்டிருக்கலாமே! நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் என்பது நிச்சயம் வயிற்றெரிச்சல் தான். :(((( பிரச்னை தீரப் பிரார்த்திக்கிறேன்.
நல்வரவு கீதா மேடம்,
நீங்க பின்னூட்டம் இட்டு நாலு நாள் கழிச்சு பார்க்கிறேன். ஏன் மெயில் ஐடிக்கு தகவல் வரவில்லை. :(
என்னமோ எல்லாமே உல்டாவாகத்தான் போய்க்க் கொண்டிருக்கிறது.
தங்கள் பிரார்த்தனையாவது பலிக்கட்டும். :)
நன்றி
கபீரன்பன், உங்கள் நிறைவு பதிவை படிக்க முடியாமல் வெளியில் சென்று விட்டேன். மகனுக்கு விடுமுறை அதனால் வெளியில் அழைத்து சென்று விட்டான்.
தினசரி தியானம் தினம் படிப்பேன் பலவருஷங்களாய். இங்கு கொண்டு வரவில்லையே என நினைத்தேன், உங்கள் பதிவின் மூலம் ஒரு வாரமாய் படித்து மகிழ்ந்தேன். தொகுத்து அளித்த அமுதமொழிகள் அருமை.
சுவாமி சித்பவானந்தர் அவர்களை சிறு வயதில் சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறேன். அவர் கயிலை பயணம் புத்தகம் படித்து எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இறைவனை வணங்கி இருக்கிறார். நாம் இப்போது சுற்றுலா செல்வது போல் போகிறோமே என்று நினைத்துக் கொண்டேன். அவர் ஆசி பெற்றதால் தான் எங்கள் கயிலை பயணம் போக வாய்ப்பு இறைவன் அருளினார் என நினைக்கிறேன்.
வலைச்சர பாயல் மிக அருமை.
புதுவருட வாழ்த்து கவியும் அருமை.
இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிக அருமையாக செய்து பயனுள்ள பதிவுகளை கொடுத்து இருக்கிறீர்கள் ஒவ்வொன்றையும் படித்து விடுகிறேன்.
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
சேமிப்பை கஷ்டம் பார்க்காமல் பகிர்ந்து இருந்தால் எங்களுக்கு அருமையான கட்டுரைகள் கிடைத்து இருக்கும்.
உங்களுக்கு பணி சுமைகள் குறைந்து எங்களுடன் நீங்கள் படித்த நல்லவிஷ்யங்களை பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி மேடம்,
தங்களின் தொடரும் ஆதரவுக்கு எப்போதும் கடமைப்பட்டவன்.
//உங்கள் பதிவின் மூலம் ஒரு வாரமாய் படித்து மகிழ்ந்தேன். தொகுத்து அளித்த அமுதமொழிகள் அருமை.///
அவருடைய தினசரி தியானத்தைப் தினமும் படிக்க விழைந்தால் அவர்களுடைய வலைப்பக்கத்தில் தினமும் பிரசுரிக்கப்படுகிறது. (http://rktvm.com/tamil.php )
அமெரிக்காவில் இருப்பினும் தொடர்ந்து படிக்கலாம்.:)
வருகைக்கு மிக்க நன்றி
உங்களுக்கு நன்றி. இனி தினம் தினசரி தியானத்தை படித்து மகிழ்கிறேன்.
நீங்கள்குறிப்பிட்ட பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும் கண்டிப்பாய் அத்தனையும் நல்ல முத்துக்கள்.
நன்றி கபீரன்பன்.
Visit : http://mathysblog.blogspot.com/2013/10/blog-post_30.html
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்....
Post a Comment