Tuesday, November 22, 2011

அவதாரத்தை அழைத்த அரவிந்தர்

1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்வதையும் அவரே ஏற்றுக் கொண்டார். அரவிந்தர் சிறிது சிறிதாக விலகிக் கொள்ள ஆரம்பித்தார்.
ஸ்ரீ அரவிந்தரின் தியான நேரங்கள் மேலும் மேலும் கூடிக் கொண்டே போனது. வழக்கமான மாலை நான்கு மணிக்கு பக்தர்களுடனான அரைமணி நேர உரையாடல் நேரம், நேரம் கடந்து துவங்க ஆரம்பித்தது. அது மணி ஆறு, ஏழு பின்னர் எட்டு என்று தள்ளிக் கொண்டே போக ஆரம்பித்தது. ஒரு நாள் அவர் தியானத்திலிருந்து வெளிவந்த நேரம் அதிகாலை இரண்டு மணி.

அரவிந்தரின் இந்த தீவிர தியானம் பேராத்மாவை பூமிக்கு கொண்டு வருவதற்கானது என்று பக்தர்களுடன் உரையாடும் போது அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. தன்னை அந்த பேராத்மாவோடு இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாய் அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 15 க்கு முன்னும் பின்னுமான நாட்களில் அவர் சொல்லியிருக்கிறார்.

பலருக்கும் அவருடைய பெருமுயற்சி பற்றிய நம்பிக்கை வேடிக்கையாய் இருந்தது. சமுதாயத்திற்கு வழிகாட்டாமால் ஏன் இப்படி வழி தவறிப் போகிறார் என்றும் நினைத்தனர். ஆனால் அவருடைய பக்தர்களுக்கு அந்த பேரான்மாவுடன் அவருக்கு இருந்த தொடர்பு பலவாறு புரியத் தொடங்கியது. அவர்கள் அருகில் இருப்பினும் தொலைவில் இருப்பினும் அவர்களுடைய சங்கடங்கள் அரவிந்தரை நினைத்த மாத்திரத்திலேயே தீர்ந்து போயின. மனித சமுதாயத்தின் மேல் அரவிந்தருக்கிருந்த அளவு கடந்த அன்பை அவர்கள் அறிந்தனர். அவருடைய சாவித்திரி யில் எழுதியுள்ள ஒரு வரிக்கு அவருடைய வாழ்க்கையே உதாரணமாயிற்று
“ His Spirit's stillness helped the toiling world "

அப்பேற்பட்ட மகான் பேரான்மாவை பூமிக்கு அழைப்பதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளேன் என்னும் போது அவருடைய பக்தர்கள் அனைவரும் அதை உறுதியாக நம்பினர். விரைவிலேயே பரமபுருஷன் பூமிக்கு இறங்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். நாட்கள் உருண்டு கொண்டிருந்தன. நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து ஏனோ அரவிந்தரிடமிருந்து அவருடைய முயற்சியின் வெற்றியை அறிய எதிர்பார்ப்பு அதிகமாயிற்று. இறுதியாக அந்த நாளும் வந்தது. நவம்பர் 24 ஆம் தேதி மாலை ஸ்ரீ அன்னை யாவருக்கும் அழைப்பு அனுப்பினார்.

வழக்கமாக தியானம் புரியும் வராந்தாவில் இருபத்து நான்கு பக்தர்கள் குழுமினர். அரவிந்தர் அமரும் நாற்காலிக்கு பின்புறம் சீனத்துப் பட்டுத் திரைச்சீலை அவரது அறைக்கதவை மூடியிருந்தது. அதில் மூன்று டிராகன்கள் ஒன்றின் வாலை மற்றொன்று கவ்வியிருப்பது போல் ‘லேஸ்’ வேலை செய்யப்பட்டிருந்தது. பூமி, மனவெளி மற்றும் ஆகாயம் ஆகிய டிராகன்கள் ஒன்று கூடும் போது சத்தியம் நிலைக்கும் என்று சீனாவில் நம்பப்படுவதை குறிப்பதாம். அங்கே பேரமைதி நிலவியது. ஒரு ஒளிவெள்ளம் ஆட்கொள்வதை பலர் உணர்ந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் யாவரும் காத்திருந்தனர்.

கதவு திறக்கப்படுவது டிக் என்ற ஒலியின் மூலம் புரிந்து ஆவல் பன்மடங்கு பெருகியது. ஸ்ரீ அன்னை தம் கண்களாலே அரவிந்தரை முன் செல்லுமாறு வேண்டினார். அரவிந்தரோ அவரைப் போலவே அன்னையே முன் செல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தினார். அவருக்கே உரிய அடக்கத்துடன் வெளி வந்தார் ஸ்ரீ அன்னை. அவர் பின்னால் கம்பீரத்துடன் வெளிவந்த அரவிந்தர் போடப்பட்டிருந்த நாற்கலியில் அமர்ந்து கொண்டார். சற்று தள்ளி ஒரு முக்காலியில் அன்னை அமர்ந்தார்.

அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு தியானம் நடந்தது. அதன் பின்னர் ஒவ்வொருவராக வணங்கி அன்னையின் ஆசியைப் பெற்றனர். அரவிந்தரும் அன்னையும் ஆசி வழங்கும் போது அரவிந்தரின் வலது கரம் அன்னையின் கரங்களுக்குக்கு பின்னால் இருந்தது. அது அன்னையின் மூலமாக அருள் தருகிறேன் என்று குறிப்பதாக பலர் கருதினர். அதைத் தொடர்ந்து மீண்டும் சில நிமிடங்களுக்கு தியானம் நடந்தது. அது அற்புத ஆழ்நிலை அனுபவம். தெய்வீகம் சூழ்ந்த அந்த நிலைமை ஒரு பெரும் ஆலமரத்திற்கான உயிர்துடிப்பு சிறு விதையிலிருந்து வெளிப்படும் போன்ற கணங்கள் அவை.

அரவிந்தரும் அன்னையும் எழுந்து உள்ளே சென்றனர். தத்தா என்றழைக்கப்பட்ட Miss Dorothy Hodgson யாவரும் கேட்கும்படியாக
“The Lord has descended in to the physical today" என்று அறிவித்தார்.

Shri A B Purani , a diciple of Shri Aurobindo writes the imporatnace of the Day as follows.

"That 24 November should be given an importance equal to that of the birthdays of Sri Aurobindo and the Mother is quite proper because on that day the descent of the Higher Power symbolic of the victory of their mission took place. The Delight consciousness in the Overmind which Sri Krishna incarnated - as Avatar - descended on this day into the physical rendering possible the descent of the Supermind in Matter "

அன்றைய தினத்திற்கு பிறகு அரவிந்தர் தரிசனம் பக்தர்களுக்கும் அரியதாய் விட்டது. வருடத்தில் மூன்று தினங்கள் மட்டுமே சில மணித்துளிகளே அவர் தரிசனம் கொடுத்தார். அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 15, அன்னையின் பிறந்த தினமான பிப்ரவரி 21, சித்தி தினம் எனப்பட்ட நவம்பர் 24 இவை மூன்றும் ஆசிரமத்தின் முக்கிய தினங்களாகப் போற்றப்பட்டன.
-----------------

அரவிந்தரின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணரலானார் Dr. V.K.Gokak எனப்படும் வினாயக் கிருஷ்ண கோகக். அவர் மகான் அரவிந்தரைப் போற்றி வழிபட்டவர்.
அவர் ஆக்ஸ்ஃபோர்ட் சர்வகலாசாலையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியத்தில் அற்புதமான தேர்ச்சி பெற்றவர். மிக இளவயதியிலேயே பல இந்திய கல்வி நிலையங்களில் முதல்வர் அல்லது இயக்குனராகப் பணியாற்றி பின்னர் பல சர்வகலாசாலைகளின் துணைவேந்தர் பதவி வகித்தவர். கல்வித்துறையில் மிகவும் போற்றப்பட்ட கல்வியாளர். அரவிந்தரின் 'சாவித்தி'ரியை மிகவும் நுண்ணறிவோடு விளக்கியவர். ஞான பீட விருது பெற்ற சாகித்திய கர்த்தா

ஒரு முறை ஆந்திர கவர்னரின் அழைப்பை ஏற்று தலைமை உரையாற்ற ஹைதிராபாத்தில் ஒரு விழாவிற்கு சென்றார். அதன் முக்கிய விருந்தினரான சத்திய சாயி பாபாவை அதற்கு முன் அவர் சந்தித்ததில்லை. அவரைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவும் இல்லை.

அவர் தமது உரையைத் துவங்கி சிறிது நேரத்திலேயே இனம் புரியாத ஒரு சக்தி தம்மை ஆட்கொள்வதை உணர்ந்தார். அவரைப் பிடித்திருந்த அந்த வெறுமை உணர்வு அன்றோடு விட்டு விலகியது. பிற்காலத்தில் சத்திய சாயி பல்கலை கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
அவருடைய 'தர்ஷன் என்ற கவிதையிலிருந்து ஒரு பகுதி.

Have you seen Baba
Who sets cities aflame with longing
And drenches them with the delight of existence ?
You have missed the very meaning of your life
If you have not seen him and been spoken to by him
..............
He is the healer of a world in pain
The blue throated god
That drinks the poison of its suffering
To make it happy and whole

மகான்களைப் புரிவது கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும். நமக்கு அது இல்லாதபோது அவர்கள் அருகிலிருந்து பணியாற்றிய கோகாக் போன்றவர்களின் வார்த்தைகளை தான் நாம் நம்ப வேண்டும்.
இன்று பகவான் சத்திய சாயியின் ஜன்மதினம்(23-11-1926). அடுத்ததினம் அரவிந்தர் அறிவித்த அவதாரம் இவரே என்று பெரும்பான்மையான சாயி பக்தர்கள் நம்புகின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.