பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாயம் குறைந்து வருகிறது. அதை பலரும் சுட்டிக்காட்டி நம் நாட்டிலும் அந்நிலை வந்துவிடக்கூடாது என்று எவ்வளவு சத்தம் போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது நம் அரசியல் நிலைமை. உழவர் சந்தை போன்ற ஒரு சில நல்ல யோசனைகள் கூட வோட்டுக்கான திட்டமாகி அங்கும் தரகர்கள் பினாமி பேர்களில் இயங்குவதாகக் கேள்வி :(
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கம், பட்டு உற்பத்தி கூட்டுறவு போல் கறிகாய் உற்பத்தி, நெல், பயிறு பிற தானியங்களுக்கும் கூட்டுறவு முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரும் சுவான்தாரர்கள் இவற்றில் பங்கேற்காமல் தனியாக இயங்குவதால் ஒற்றுமை இல்லையோ என்னவோ.
சூரிய இந்திரரின் அருள் எல்லோருக்கும் பொது. உழைப்பின் பலன் உரியவர்களுக்கு போய் சேர்வது நாட்டிற்கு நலம் பயக்கும். கூடியவரை சந்தையில் சென்று விளைபவருக்கு பொருளின் விலை கொடுத்தால் அதுவே நாம் செய்யும் பெரும் உதவி.
வாழையை வளர்க்க வார்த்தோம் நீர்
விற்பனைக்கும் கேட்குது வியர்வை நீர்
பேரத்தில் பொழுதை கழித்திடுவீர் நீர்
எமக்கு பசியாறக்
கிடைப்பதோ ஒரு கோப்பை தேநீர்
பேரத்தில் பொழுதை கழித்திடுவீர் நீர்
எமக்கு பசியாறக்
கிடைப்பதோ ஒரு கோப்பை தேநீர்
உழுது விளைந்தால் போதாதய்யா
உழைப்பது சந்தை வரைத் தொடருதய்யா
வெயிலோ வெங்காயமோ, எம் மனக்காயம்
புரிந்தவர் எவரும் இல்லை அய்யா
வெயிலோ வெங்காயமோ, எம் மனக்காயம்
புரிந்தவர் எவரும் இல்லை அய்யா
அனைவருக்கும் பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துகள்
6 comments:
உழுபவருக்கு உணவில்லை. என்று மாறும் இந்த நிலை?
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கபீரன்பன் ஐயா.
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
நல்வரவு இலங்கேஸ்வரன்,
உழவுத் தொழிலை நன்முறையில் ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் தலைமை இல்லாதது்தான் பிரச்சனை என்று தோன்றுகிறது. காலம் பதில் தரும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பொங்கல் வாழ்த்துகள் மதுரையம்பதி. (தங்களுக்கு தனி மடலிலும் வந்திருக்க வேண்டுமே !)
பதிவை எட்டிப் பார்த்தமைக்கும் நன்றி
நன்றி திகழ்மிளிர்.
தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். இன்னும் 11 மாதம் 15 நாட்கள் இருப்பதால் புத்தாண்டு வாழ்த்துகளையும் சேர்த்துக்கொள்கிறேன். :))
பிடுதி நித்யானந்தர் ஆசிரமம் சென்று வந்தீர்களா?
வாழ்த்துகள்
Post a Comment