இன்று மாலை கூகிள் க்ரோம்-ல் HDFC வங்கிக் கணக்கை Net Banking ல் திறந்து வேண்டியவர் ஒருவரின் இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த விழைந்தேன்.
Third party transfer ஆதலால் அவருடைய பெயரை நேற்றே பதிவு செய்து,அவர்கள் சொல்லியிருந்தபடி 24 மணிநேரம் கழித்து ஒப்புதல் இருப்பின் பணம் செலுத்த வேண்டும் என்பதால் ஒப்புதலை அறியவும் பணம் செலுத்தவும் முறைப்படி உள்நுழைந்தால் எனக்கு அதிர்ச்சி.
மூன்றாமவருக்கான பணம் மாற்றுவதற்கான நீட்சி (menu) காணப்படவில்லை. Sidebar menu விலும் காணப்படவில்லை.
ஏதேனும் தவறாகி அந்த வசதியே முடக்கப்பட்டுவிட்டதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இது நான் கல்லூரியில் படிக்கும் என் மகனுக்காக தொடர்ந்து உபயோகித்துவரும் ஒரு சேவை. ஆகையால் முடக்கப்பட்டு விட்டால் பல பிரச்சனைகள் ஏற்படுமே என்ற கவலைத் தொற்றிக்கொண்டது.
சரி, உள் நுழையும் போதே ஏதேனும் கவனிக்காமல் விட்டிருப்போமோ என்று ஒருமுறை வெளியேறி மீண்டும் கவனமாக ஒவ்வொரு அடியையும் கவனித்து சரிபார்த்து உள்நுழைந்தேன். திரும்பவும் அதே பிரச்சனை.
ஏதடா இது மதுரைக்கு வந்த சோதனை யாரிடம் முறை போக வேண்டும் என்று யோசித்தேன். நேற்றுவரை சரியாக இருந்தது இன்று எப்படி மாறிவிடும் ? பளிச்சென்று ஒரு உண்மை புரிந்தது. நேற்று உட்புகுந்தது Firefox உலாவியில். இன்று Chrome-ல்!!
இன்னுமொருமுறை நரியாரை தூது விடுவோம் என்று Firefox மூலம் உட்புகுந்தால் எல்லா நீட்சிகளும் (மெனுக்களும்) அழகாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன.
வந்த வேலையை முடித்துவிட்டு firefox லிருந்து வெளியேறி மீண்டும் GOOgle Chrome-ல் உட்புகுந்தால் பழைய கதைதான். மேலிருக்க வேண்டிய நீட்சிகள் காணப்படவில்லை.
இந்த பிரச்சனை வங்கியைச் சேர்ந்த வலைத்தள அமைப்பாளர்கள் சரி செய்ய வேண்டியதா அல்லது கூகிள் க்ரோம் சரி செய்ய வேண்டியதா ?
நிபுணர்கள் இதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றால் பலருக்கும் உதவியாக இருக்கும்.
24 comments:
இது கூகுள் குரோமில் உள்ள பிரச்சனைதான். ஹாட்மெயில் திறந்தால் கூட சில பிரச்சனைகள் கூகுள் குரோமில் வரும். இது பீட்டா ரிலீஸ் தானே. போகப் போகப்பாருங்கள் குரோம் பட்டைய கிளப்பப்போகுது
ஹாட்மெயில் மட்டுமல்ல யுடியுப், பிளாக்கர் என எதைத்திறந்தாலும் இதே பிரச்சினை. ஜாவா ஸ்கிரிப்புடகள் உட்பட பல ஸ்கிரிப்டுகள் லோட் ஆக மறுக்கின்றன. Google புரடக்டுகளை திறந்தால் எந்த பிரச்சினையும் இல்லை மிக் வேகமாக திறக்கின்றன.
firefox 3 is not showing yahoo mail correctly? do you know why?
ஆமாம்.. எளிமைப் படுத்துகிறோம் என்று சொல்லி.. நம்மை பாடா படுதுராங்க...
நன்றி கொழுப்பு, முகவைத்தமிழன்.
இந்த பிரச்சனை வந்தபிறகு தான் இந்த என் வலைப்பக்கத்தை க்ரோமில் திறந்து பார்த்தேன். அதில் பக்கத்திலுள்ள Power point slide show விட்ஜெட் (Power of the mother)பாதி தான் தெரிகிறது :(
Firefox-ல் முழு விட்ஜெட்டும் தெரிகிறது.
வேறு வழியில்லை. அதை நீக்க வேண்டியதுதான்.
நன்றி
வாங்க வெத்து வேட்டு
Firefox -ல் யாஹூ மெயில் சரியாகவே தெரிகிறது, தமிழ் எழுத்துருவும் சரியாகவே தெரிகிறது. ஏதேனும் ADD ON நிறுவப்படாமல் இருக்கிறதா என்று சரி பார்த்தால் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
//எளிமைப் படுத்துகிறோம் என்று சொல்லி.. நம்மை பாடா படுதுராங்க.//
நல்வரவு வாசு. கொழுப்பு அவர்களுக்கு சொன்ன பதிலில் நாம் படும் பாடு தெரிகிறதே. வர வர டெம்ப்லேட்டுகளையும் எல்லா உலாவிகளையும் வைத்து பார்த்து், ஒத்திகை எல்லாம் சரியாக வந்தபின் தான் அரங்கேங்கேற்றமே செய்ய வேண்டும் போலிருக்கிறது ! அப்போதும் கூட எந்த விட்ஜெட் எதில் வேலை செய்யும் செய்யாது என்பது முன்கூட்டி தெரியாது. ஏனென்றால் நாளுக்கொரு புதுவித விட்ஜெட்டுகள் வந்து கொண்டிருக்கின்றனவே !
பின்னூட்டத்திற்கு நன்றி
நண்பரே, இது கூகுள் குரோம் பிரச்சனை இல்லை, வங்கியின் தளத்தில் தான் பிரச்சனை.
முதல் படத்திலும் இரண்டாம் படத்திலும் Logout பொத்தான் எங்கே இருக்கிறது என்று பாருங்கள், அது தான் பிரச்சனை.
”Welcome, ...” என்று ஆரம்பிக்கும் இடத்தில் உங்கள் மவுஸ் கர்சரை க்ளிக் செய்து கீழே இழுக்கவும், மறைந்த பகுதிகள் எல்லாம் தெரியவரும்.
நன்றி வெங்கடராமன்.
//”Welcome, ...” என்று ஆரம்பிக்கும் இடத்தில் உங்கள் மவுஸ் கர்சரை க்ளிக் செய்து கீழே இழுக்கவும், மறைந்த பகுதிகள் எல்லாம் தெரியவரும். //
இழுத்துப் பார்த்தேன். மறைந்திருந்த பகுதிகள் வெளிவந்தன. ஆனால் welcome பகுதியும் Logout பொத்தான் காணாமல் போய்விட்டது. சரியென்று பக்கவாட்டிலும் இழுத்துப் பார்த்தேன். மாற்றம் எதுவுமில்லை. Menu Alignment எல்லாம் இன்னமும் தாறுமாறாகத்தான் தெரிகின்றன.
எனினும் மிக முக்கியமான தகவல் தந்தமைக்கு வாசகர்கள் சார்பாகவும் மிக்க நன்றி.
ஆமாம் ஆமாம்.....
யுனிகோடு எழுத்துருக்களை கூட சரியாக பயன்படுத்த முடிவதில்லை இந்த கூகுல் குரோமில். யாராவது உதவினால் நன்றாக இருக்கும்
//நண்பரே, இது கூகுள் குரோம் பிரச்சனை இல்லை, வங்கியின் தளத்தில் தான் பிரச்சனை.//
வெங்கட்ராமனின் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன். CSS என்ற நுட்பம் ஒவ்வொரு உலாவியிலும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுத்தப்படுவதால் இத்தகைய வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஆகவே, வலைத்தளம் வடிவமைப்பவர்கள் (web designers) தங்கள் தளம் எல்லா முன்னணி உலாவிகளிலும் (FF, IE, Safari, Chrome, etc.) சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்து உறுதி செய்ய வேண்டும். அல்லது, குறைந்தப்பட்சம் எந்தெந்த உலாவிகளில் தளம் முழுமையாக சோதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலாவது தளத்தின் மையப் பகுதி ஒன்றில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வங்கிச் சேவை, விமான / இரயில் முன்பதிவுச் சேவை பேன்ற அத்தியாவசியத் தளங்களிலாவது இது போன்ற விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒரு குறைந்தப்பட்ச எதிர்பார்ப்பு.
பொதுவாக, Internet Explorer அல்லது IE எனப்படும் உலாவி, வழக்கில் இருக்கும் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வராததால், அதில் ஒரு தளத்தை வேலை செய்ய வைப்பதற்கு கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும். இத்தகைய நிலையை எதிர்த்து ஒரு போராட்டத்தை இங்கே தொடங்கியிருக்கிறார்கள் :)
குரோம்காரி ஊருக்கு வந்த புதுசுல அவ இப்படியாக்கும் அப்படியாக்கும்ன்னு உசுப்பேத்தி விட்டு தமிழில் தட்டச்சினா எழுத்து பின்னாலே பின்னாலே போகுது.அப்ப விட்டதுதான் அவளோட சாகவாசத்தை.
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் Voice on Wings !
ஆனால் பெரிய வங்கிகள், ரயில்வே போன்ற வலைத்தளங்களில் மாற்றங்கள் செய்வது நேரமும் செலவும் பிடிக்கும். தினமொரு உலாவிகள், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அவர்கள் வலைத்தளத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கடினம். ஆகவே தாங்கள் சொன்னது போல்
//குறைந்தப்பட்சம் எந்தெந்த உலாவிகளில் தளம் முழுமையாக சோதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலாவது தளத்தின் மையப் பகுதி ஒன்றில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் //
அதை நுழைவு பக்கத்தில் பெரியதாக போட்டால் ஓரளவு குழப்பத்தை தவிர்க்கலாம்.
நன்றி
வாருங்கள் அழகன்,
//யுனிகோடு எழுத்துருக்களை கூட சரியாக பயன்படுத்த முடிவதில்லை இந்த கூகுல் குரோமில் ..//
இது புது செய்தியாக இருக்கிறது. க்ரோமில் யுனிகோட் எழுத்துகள், தமிழ் வலப்பக்கங்கள் சிறப்பாகவே தெரிகின்றன. விவரம் அறிந்தவர்கள் யாராவது விளக்குவார்கள் என்று நம்புவோம்.
நன்றி
//யுனிகோடு எழுத்துருக்களை கூட சரியாக பயன்படுத்த முடிவதில்லை இந்த கூகுல் குரோமில் ..//
நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனால் நம்முடை NHM Writter ல் புதிய பதிப்பை உபோகப்படுத்தினால், யுனிகோட் எழுத்த்ருக்களை தட்டச்சு செய்யலாம்.
மேலதிக தகவலுக்கு கீழே உள்ள முகவரிக்கு செல்லவும்
http://software.nhm.in
நல்வரவு ராஜ நடராஜன்,
//தமிழில் தட்டச்சினா எழுத்து பின்னாலே பின்னாலே போகுது...//
ஒருவேளை தாங்கள் பழைய NHM தட்டச்சு பயன் படுத்துகிறீர்களோ என்னவோ. புதிய NHM -ல் பல குறைகள் களையப்பட்டிருக்கின்றன. இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் க்ரோம் தட்டச்சு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வெங்கடராமன்,
நடராஜன் அவர்களுக்கு நான் எழுதிய பதிலை தங்கள் பதிலும் உறுதி செய்வது போல் இருக்கிறது.
தாங்கள் NMH-ன் தள முகவரியை கொடுத்திருப்பது பலருக்கும் பயனளிக்கும்.
நன்றி
க்ரோம் மை பயன்படுத்தி , பைத்தியம் பிடிக்காத குறையாய் மறுபடியும் பயர்பாக்ஸுக்கே வந்துவிட்ட ஒரு அப்பாவி ஜீவன் நான்...
நண்பர்களுக்கு பயர்பாக்ஸில் ஏதும் பிரச்சினையிருந்தால் "ஓபரா" முயற்சி பண்ணி பாருங்கள்....எனக்குத் தெரிந்து பயர்பாக்ஸ் தவிர்த்த யூஸர் பிரன் ட்லி பிரவுசர் அது....!!
வாங்க மதிபாலா,
//க்ரோம் மை பயன்படுத்தி , பைத்தியம் பிடிக்காத குறையாய் ...//
புதிதாக அறிமுகப்படுத்தப் பெறும் எதுவும் பரவலான ஒப்புதல் பெற சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பது புரிந்து கொள்ள கூடியதே.
நாம் க்ரோம் பற்றி இப்படி நினைக்கையில் ரமணி (வார்ப்புருக்களை யும் பிற மென்பொருட்களையும் வடிவமைப்பவர்) க்ரோம் பற்றி மிகவும் பாராட்டியே பேசுகிறார்.
அதைப்பற்றி இங்கே காணலாம்
நன்றி
//ஒருவேளை தாங்கள் பழைய NHM தட்டச்சு பயன் படுத்துகிறீர்களோ என்னவோ. புதிய NHM -ல் பல குறைகள் களையப்பட்டிருக்கின்றன. இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் க்ரோம் தட்டச்சு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.//
உங்கள் கருத்துக்கும் உதவிக்கும் நன்றி.இருந்தாலும் இப்போதைக்கு நெருப்பு நரிக்கும் எனக்குமுள்ள நட்பை நீட்டிக்கலாமென உள்ளேன்:)
இப்போதைக்கு நெருப்பு நரிக்கும் எனக்குமுள்ள நட்பை நீட்டிக்கலாமென உள்ளேன்:)
இது தான் Brand loyalty !!
அதை ஜெயிப்பதற்கான பலமான போட்டிதான் நாம் கண்டு கொண்டிருப்பது :))
http://www.hdfcbank.com/common/onlineservices/NB-Browser.htm
Browser Requirement for Accessing NetBanking
NetBanking at HDFC Bank works best with Internet Explorer 5.5 and above and Netscape 4.7 and above.
***
This info is there
Home Page ->
select Net Banking radio button
-> it will bring new page
It has following
Browser Requirements |Continue|
**
But there are chances to miss this warning. May be they can provide flashing sign in big image .
Many Thanks கல்வெட்டு,
//But there are chances to miss this warning. May be they can provide flashing sign in big image . //
There is an implicit expectation in us which expects "the latest versions would surpass the earlier versions of any other browser" in terms of performance.
'It may not be true ' is what we learn. Thanks for the feed back
உலாவிகளுக்கு இடையேயுள்ள வேற்றுமைச் சிக்கல்களால்தான் இவை ஏற்படுகின்றன
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Post a Comment