இடுகைகளை பிரசுரிப்பதற்கு முன்பே தங்கள் வலைப்பூவில் எப்படித் தெரியும் என்பதை முன்னோட்டமாகப் பார்க்க Fire fox தரும் add on மென்பொருள் Scribe Fire இப்போது உதவுகிறது.
இடுகைகளை வெளியிட பலர் பலவிதமான வழிமுறைகளை கையாளக்கூடும். நான் என் இடுகைக்கானக் கட்டுரைகளை தனியாக தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு பின்னர் ப்ளாகரில் கடவு சொல் மூலம் உள் நுழைந்து புது பதிவிற்கான பெட்டியில் நகலெடுத்து ஒட்டுவது வழக்கம். பலர் நேரடியாக மின்னஞ்சலில் செய்வதாகக் கேள்வி. அதை முயற்சித்து பார்த்தது இல்லை.
Blogger-ல் பதிவுக்கான பெட்டிக்குள் காணப்படும் எழுத்துருவுக்கும் வலைப்பூவில் காட்டப்படுவதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. மேலும் அது தரும் முன்னோட்டம் படு அபத்தம். படங்களுக்கும் எழுத்துகளுக்கும் இருக்கும் இடைவெளி மற்றும் பல பத்திகளுக்கு இடையே இருக்கும் இடவெளி இவற்றை பெட்டிக்குள் வைத்து முழுவதுமாக முடிவு செய்ய முடியாது. அதனால் இடுகையை பிரசுரித்தப் பின்பும் பலமுறை மீண்டும் மீண்டும்- திருப்தியாகும் வரை- உள்ளும் வெளியுமாக அலைந்து சரி பார்த்து இறுதியான வடிவம் தர வேண்டியதாகிறது.
Scribe Fire இக்குறையை தீர்க்கிறது.
இதன் முக்கிய பயன்கள் :
1. உங்கள் முழு இடுகையையும் ஆன்-லைனில் வராமலே வலைப்பூவில் தெரிவது போல் முன்னோட்டமாகப் பார்க்க இயலும்.
2. Scribe Fire லிருந்து நேரடியாக வலைப்பூவில் பிரசுரிக்கவும் முடியும்.
3. உங்களுக்கு பல வலைப்பூக்கள் இருப்பின் எல்லா வலைப்பூக்களிலும் முன்னோட்டம் பார்க்க முடியும். அதற்கு ஒரே ஒருமுறை நீங்கள் ஆன் -லைனில் அந்த வலைப்பூவுடன் Scribe Fire மூலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதன் பின் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், சேமித்து வைத்துக் கொண்டுள்ள வலைப்பூவின் வார்ப்புருவின் மூலம் அந்த இடுகை எப்படித் தெரியுமோ அதை அப்படியே முன்னோட்டமாகக் காட்டுகிறது.
4. இதிலிருக்கும் Tool bar அதிகமான பல உள்ளீட்டு கருவிகளை கொண்டுள்ளது.
5. நீங்கள் பிரசுரித்த இடுகைகள் அனைத்தையும் Posts என்ற பெயரிலும் தயாரிப்பில் இருக்கும் இடுகைகளை Notes என்ற பெயரிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் எல்லா பதிவுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே சொடுக்கில் வந்து பார்க்க முடியும். சிதறிக் கிடக்கும் பல கோப்புகளுக்கிடையில் பழைய இடுகைகளுக்கான கோப்புகளை தேட வேண்டிய அவசியம் இல்லை.
6. விளம்பரங்கள் மூலம் வருவாய் விழைவோர்க்கு உதவும் வகையிலும் திரட்டிகளில் நேரடியாக பிங் செய்யக்கூடிய வகையிலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன.
முன்னோட்டம் Scribe Free பெட்டிக்குள்
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)
ஒரு பெரிய குறை: படங்களை ப்ளாகர் செய்வது போல் Auto size செய்வது இல்லை. API மூலம் வலையேற்றப்படும் படங்கள் பிகாசா வெப் ஆல்பம்-ல் Drop box என்ற பெயரில் சேகரிக்கப்பட்டு முழு அளவில் வலைப்பூவில் காட்டப்படுகிறது. அதனால் வார்ப்புருவின் அளவை விட பெரிதாக இருந்தால் பாதி படம் மட்டுமே காட்டப்படுகிறது. கீழே பார்க்கவும். இது Scribe Fire மூலம் வலையேற்றப்பட்டது.
ஆகையால் படங்களே இல்லாத அல்லது சிறிய அளவு படங்களுடைய பதிவுகளுக்கு Scribe Fire பெரும் பயன் தரும். பெரிய படங்களை காட்டவேண்டிய கட்டாயம் இருந்தால் Scribe Fire லிருந்து draft mode ல் வலையேற்றி பின்னர் ப்ளாகர் உள் நுழைந்து படங்களை தனியாக வலையேற்றி இடுகையின் கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்.
இப்போது அப்படித்தான் செய்திருக்கிறேன். :-)
Scribe Fire-ல் நான் விரும்பும் இப்போது இல்லாத இன்னொரு ஒரு வசதி, செய்த தவறைத் திருத்துவதற்கான Undo பொத்தான்.
பிற்சேர்க்கை :29/12/2008
படங்களை வலையேற்றுவதில் உள்ள பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது. இதற்கு அடுத்த பதிவை காணவும்.
இடுகைகளை வெளியிட பலர் பலவிதமான வழிமுறைகளை கையாளக்கூடும். நான் என் இடுகைக்கானக் கட்டுரைகளை தனியாக தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு பின்னர் ப்ளாகரில் கடவு சொல் மூலம் உள் நுழைந்து புது பதிவிற்கான பெட்டியில் நகலெடுத்து ஒட்டுவது வழக்கம். பலர் நேரடியாக மின்னஞ்சலில் செய்வதாகக் கேள்வி. அதை முயற்சித்து பார்த்தது இல்லை.
Blogger-ல் பதிவுக்கான பெட்டிக்குள் காணப்படும் எழுத்துருவுக்கும் வலைப்பூவில் காட்டப்படுவதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. மேலும் அது தரும் முன்னோட்டம் படு அபத்தம். படங்களுக்கும் எழுத்துகளுக்கும் இருக்கும் இடைவெளி மற்றும் பல பத்திகளுக்கு இடையே இருக்கும் இடவெளி இவற்றை பெட்டிக்குள் வைத்து முழுவதுமாக முடிவு செய்ய முடியாது. அதனால் இடுகையை பிரசுரித்தப் பின்பும் பலமுறை மீண்டும் மீண்டும்- திருப்தியாகும் வரை- உள்ளும் வெளியுமாக அலைந்து சரி பார்த்து இறுதியான வடிவம் தர வேண்டியதாகிறது.
Scribe Fire இக்குறையை தீர்க்கிறது.
இதன் முக்கிய பயன்கள் :
1. உங்கள் முழு இடுகையையும் ஆன்-லைனில் வராமலே வலைப்பூவில் தெரிவது போல் முன்னோட்டமாகப் பார்க்க இயலும்.
2. Scribe Fire லிருந்து நேரடியாக வலைப்பூவில் பிரசுரிக்கவும் முடியும்.
3. உங்களுக்கு பல வலைப்பூக்கள் இருப்பின் எல்லா வலைப்பூக்களிலும் முன்னோட்டம் பார்க்க முடியும். அதற்கு ஒரே ஒருமுறை நீங்கள் ஆன் -லைனில் அந்த வலைப்பூவுடன் Scribe Fire மூலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதன் பின் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், சேமித்து வைத்துக் கொண்டுள்ள வலைப்பூவின் வார்ப்புருவின் மூலம் அந்த இடுகை எப்படித் தெரியுமோ அதை அப்படியே முன்னோட்டமாகக் காட்டுகிறது.
4. இதிலிருக்கும் Tool bar அதிகமான பல உள்ளீட்டு கருவிகளை கொண்டுள்ளது.
5. நீங்கள் பிரசுரித்த இடுகைகள் அனைத்தையும் Posts என்ற பெயரிலும் தயாரிப்பில் இருக்கும் இடுகைகளை Notes என்ற பெயரிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் எல்லா பதிவுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே சொடுக்கில் வந்து பார்க்க முடியும். சிதறிக் கிடக்கும் பல கோப்புகளுக்கிடையில் பழைய இடுகைகளுக்கான கோப்புகளை தேட வேண்டிய அவசியம் இல்லை.
6. விளம்பரங்கள் மூலம் வருவாய் விழைவோர்க்கு உதவும் வகையிலும் திரட்டிகளில் நேரடியாக பிங் செய்யக்கூடிய வகையிலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன.
முன்னோட்டம் Scribe Free பெட்டிக்குள்
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)
ஆகையால் படங்களே இல்லாத அல்லது சிறிய அளவு படங்களுடைய பதிவுகளுக்கு Scribe Fire பெரும் பயன் தரும். பெரிய படங்களை காட்டவேண்டிய கட்டாயம் இருந்தால் Scribe Fire லிருந்து draft mode ல் வலையேற்றி பின்னர் ப்ளாகர் உள் நுழைந்து படங்களை தனியாக வலையேற்றி இடுகையின் கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்.
இப்போது அப்படித்தான் செய்திருக்கிறேன். :-)
Scribe Fire-ல் நான் விரும்பும் இப்போது இல்லாத இன்னொரு ஒரு வசதி, செய்த தவறைத் திருத்துவதற்கான Undo பொத்தான்.
பிற்சேர்க்கை :29/12/2008
படங்களை வலையேற்றுவதில் உள்ள பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது. இதற்கு அடுத்த பதிவை காணவும்.
2 comments:
நல்ல பதிவு நண்பரே.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்
நல்வரவு வேலன்.
கருத்துக்கு நன்றி
Post a Comment