Sunday, December 14, 2008

BOSS பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் !

இது ’சிவாஜி த பாஸ்’ பற்றி அல்ல.

அல்லது என்னோட பாஸ் பற்றியதும் அல்ல !

நான் கேட்க விரும்புற BOSS, பாரத் ஆபரேடிங் சிஸ்டம் சொல்யூஷன்ஸ்-ங்கற C-DAC அறிமுகப்படுத்தியிருக்கிற புது மென்பொருள் பற்றியது. லினெக்ஸ் திறந்த கட்டற்ற மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இதன் முக்கிய நோக்கம் இந்திய மொழிகளில் கணிணி பயன்பாட்டை விரிவாக்குதல் ஆகும்.

இதில் கட்டளை நீட்சிகள் எல்லாம் தமிழ் மற்றும் இந்தி போன்ற இந்திய மொழிகளிலே காணக் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

லினக்ஸ் சார்ந்த டெபியன், உபுண்டு போன்ற சேவைகளால் இது முடியாததாகையால் இது முக்கியத்துவம் பெறுகிறது

இதில் Fire fox 3.0 உலாவியும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டிருப்பதாகவும் 18000 பலவேறு மென்பொருட்கள் தரவிறக்கம் செய்து பரவலாக பயன் படுத்த் முடியும் என்றும் c-DAC வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் வலையுலகில் வலம் வர மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்கிறார்கள்.

இதை யாரவது நமது வலையுலக நண்பர்கள் பயன் படுத்தியிருந்தாலோ அல்லது அனுபவங்களை ஏற்கனவே பதிந்திருந்தாலோ அதற்கான இணைப்புகளை கொடுத்தால் என் போன்ற வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சில ஆங்கில குழுமங்களில் தேடிய விவரங்கள் பயனளிப்பதாக இருக்கவில்லை.

ஹைதராபாத்தில் இம்மாதம் 18 ஆம் தேதி இலவச விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு வலைப்பக்கம் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும். அங்கு வசிக்கும் நண்பர்கள் இதை பயன் படுத்திக்கொள்ளவும். இலவச குறுந்தகடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது !!

எப்படியோ கிராம கிராமங்களுக்கும் கணிணியை கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் வந்திருப்பது மகிழ்ச்சி

3 comments:

புருனோ Bruno said...

மிகவும் அருமையான இயங்குதளம்

நான் போன வருடமே உபயோகித்திருக்கிறேன்.

நான் உபயோகித்த போது ஒரு குறை இருந்தது. தமிழ் 99 முறையில் ழ் அடிக்க முடியாது

தற்சமயம் சரி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சென்னையில் CDAC அலுவலகத்தில் இலவசமாக குறுந்தகடு கிடைக்கும்

What was most impressive was that, if you install the Operating System with the system connected to Network, it will automatically configure everything :) :) :)

அதே போல் வந்தகட்டில் நிறுவாமலேயே பயன் படுத்தும் வகையில் தனியாக ஒரு குறுந்தகடும் உண்டு

புருனோ Bruno said...

நச்சுநிரலிகளின் தொல்லை கிடையாது

பாதுகாப்பான, உபயோகிக்க எளிதான, நிறுவுவதற்கு எளிதான, தமிழ்99ல், போனடிக், பழைய/புதிய தட்டச்சு முறையில் உள்ளிடக்கூடிய இயங்குதளம்

KABEER ANBAN said...

மிக்க நன்றி டாக்டர் புருனோ,

அதிகம் கேள்விப் படாததால் சற்று முன்பின் யோசிக்க வேண்டி இருந்தது. இது உபுண்டு பேசப்படும் அளவுக்குக் கூட பேசப்படுவதில்லை. மிக முக்கியமாக நச்சு நிரலிகளிலிருந்து பாதுகாப்பு என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி.