மும்பய் வன்முறைகளைப் பற்றிய, ராமலக்ஷ்மி அவர்களின், மனக்குமறல் முத்துச்சரம் வலைப்பூவில் மனதைத் தொடும் ஒரு கவிதையாக மலர்ந்திருக்கிறது. கலங்கி நிற்கும் எவர்க்குள்ளும் எழும் நியாயமான உணர்வுகள் அவை. ஆனால் கலங்கி நிற்பது மன உறுதியை குலைத்திடும். காலனையும் காலால் மிதிக்கத் துணியும் பாரதியின் வீர உணர்ச்சி இருந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். ஆகவே இன்னொரு கவிதையை பாரதியின் கோணத்தில் படைத்திருக்கிறேன்.
இதற்கு வித்திட்ட ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி.
என்னதான் செய்வீர்,செய்திடீர்
எதுவரை செல்வீர்,சென்றிடீர்
குள்ள நரிகளின் கூட்டம்
எததனை தினங்கள் ஆட்டம்
கட்டிக்கொடுத்த சோறு காணுமோ
குறியற்ற பயணத்தில்,மூர்க்கரே
வெட்டி முறிப்போம் உம் கால்களை
வன்முறை கொள்ளும் கைகளையுமே
குழம்பிய குட்டையில் மீனோ
கனவு காணும் மூடர்களே
பாரத தேசம் சிறு குட்டையோ
குழப்பிடின் எதிர்வரும் சுறாக்களே
மனிதத்தை மறப்பது புனிதமோ
மாற்றலரை அழிப்பது பாவமோ
மந்தபுத்தி யர்தம் கையோங்குமோ
மருண்டு மடிவதும் விவேகமோ
இறப்பதற்கு அஞ்சோம் உலகிலே
பிறந்த எவரும் சாவது உறுதி
கதறிப் பணியோம் வன்முறைக்கே
கலங்க அடிப்போம் இது உறுதி
மகன் போனால் மகன்கள் உண்டு
தமயன் போனால் தமயனா ருண்டு
எமக்கு உண்டு அன்பின் மொழி
உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி
(மாற்றலர்= எதிரிகள்; தெண்டு= கோல்,தடி)
8 comments:
ஆறதலைத் தரும் வீரமான வைர வரிகள். நன்றி கபீர் அன்பன்.
இந்த வரிகளை அப்படியே நடைமுறைப் படுத்த நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை. இதைச் செய்தால் இவர் ஓட்டு அடுத்த தேர்தலில் கிடைக்காது..இப்படி செய்தால் இவர் ஆதரவு இப்போதே வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது போன்ற பயங்களிலேயே ஒவ்வொரு தலைமைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தடுமாறி நிற்பதுதான் இத்தனைக்கும் ஆணிவேர்.
அன்று இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி போல துணிந்து செயல் பட வேண்டும் அரசு. நிறைகுறைகள் இருக்கலாம் அதில். ஆனால் இப்போதைய தேவை தீவிரவாதத்தை எப்பாடு பட்டாவது களைவதே. அதற்கு ஒட்டு மொத்த நாடும் ஒத்துழைக்க வேண்டும்.
உங்கள் கவிதை மெய்ப்பட வேண்டும்.
மீண்டும் என் நன்றிகள்!
நன்றி ராமலக்ஷ்மி அவர்களே,
//நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை //
Crisis brings out the best என்பார்கள். துணிவான தலைமை வருவதற்கு காரணமும் காலமும் தேவைப்படுகிறது.
வந்து கொண்டிருக்கிறது என்று நம்புவோம் !
மிக்க நன்றி
இரண்டு பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு சிறப்பான கவிதையைத்தந்திருக்கிறீர்கள்.
நம்புவோம் நல்லது நடக்கட்டும்.
/
உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி /
வன்முறைக்கு
அது தான் சரியான வழி
நல்வரவு முத்துலட்சுமி,
பதிவை ரசித்ததற்கு நன்றி. அதன் பெருமை ராமலக்ஷ்மி அவர்களையே சாரும். source of inspiration !!
நன்றி
வாங்க திகழ்மிளிர்,
இப்ப நம்ம நிலைமை ”எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து” கொள்கிறோம். எய்தவன் யாருன்னும் தெரியும். பொறுமைங்கறது பலகீனம்ன்னு நெனச்சு வாலாட்டறவங்களுக்கு கொடுக்கிற நேரத்தில் உதை குடுத்தால் ஒண்ணும் தேறாமல் போய்விடும். அந்த நம்பிக்கை இருக்கிறது.
நன்றி
நெத்தியடி!
அருமையான வரிகள்.
நல்வரவு SurveySan,
//ராமலக்ஷ்மி அவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்
”உங்களுக்கு எப்படி என் கவிதை வித்திட்டதோ, அதே போல என் கவிதைக்கு வித்திட்டது சர்வேசனின் பதிவாகிய "Mumbai will survive" http://surveysan.blogspot.com/2008/11/mumbai-will-survive.html. குறிப்பாக அப்பதிவின் முதல் வரி.
அவரது பதிவும் ஏறத்தாள உங்கள் கவிதையின் கருத்தைக் கொண்டதே” //
Cricle complete ஆயிடிச்சு. உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி
Post a Comment