இயற்கையின் நியதிப் படித்தான் எல்லாம் நடக்கிறது என்பது வழி வழியாக சான்றோர்கள் ஏற்றுக் கொண்டுள்ள வழக்கு.
இதில் நமக்கு என்னப் பிரச்சனையென்றால் இயற்கை (அல்லது கடவுள்) அந்த நியதிகளை வெளிப்படையாக திறந்த புத்தகமாக நமக்குக் காட்டுவதில்லை. இதனால் சஸ்பென்ஸ் அதிகமாகப் போய் பெரிய நகரத்தில் மொழி, வழி தெரியாமல் சிக்கிக் கொண்டவனைப் போல் ' ..........இத்தாவிர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்று சிவபுராணத்தில் மணிவாசகர் சொல்வதை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது ஒரே வழி அந்த கடவுளிடம் சரணடைவதே. அவனிடம் வேண்டப்போவது என்ன ?
D.V.G. இதற்கு மாணிக்கவாசகர் மொழியிலேயே விடை தருகிறார்.
இங்கே மனிதர்களுக்கே உரித்தான மனத் தடுமாற்றத்தை அழகாகப் படம் பிடிக்கிறார். நம்முடையே இச்சைகளை அவன் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆனால் அதை அருளுவானோ இல்லையோ என்ற சந்தேகம். அதே வேளை நாம் இச்சைப்பட்டதெல்லாம் நமக்கு நன்மை தருமா என்பதும் தெரியாது. சரி அவனிச்சைப்படியே நடக்கட்டும் என்று உறுதியாக நம்பும் மனமாவது உண்டா ? ( என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்).
ஆகையால் கடவுளிடம் ஏதாவது வரம் வேண்டுவதானால் "நீ அருளுவதை ஏற்றுக் கொள்ளும் உறுதியான மனதைக் கொடு' என்பது மட்டுமாகவே இருக்கட்டும் என்று மக்குத் திம்மன் வாயிலாக நமக்கு சொல்கிறார் டி.வி.ஜி.
மொழிபெயர்ப்பு :
வேண்டியதை ஈவான் ஈசன் என்ற நிலையில்லை
வேண்டுவதில் நலம் யாதென அறிவுமில்லை
வேண்டாமலே வருவது அவனிச்சை எனக் கொள்
வேண்டிடு நீ அந்நெஞ்சுரம் - மக்குத் திம்மா ( 943)
மாணிக்கவாசகர் வழியிலேயே சொல்லுகிறார் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் காலத்தால் மொழியால் பிரிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடையே உள்ள கருத்து ஒற்றுமை எப்படி வெளிப்படுகிறது என்பதை கீழ்கண்ட திருவாசகப் பாடலை படித்தாலே புரியும்.
2 comments:
அனைத்தும் ஈசுவர இச்சைதான்.
அவன் ஆட்டிவைக்கிறார், நாம் ஆடுகிறோம்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
அருமையான பதிவு.
நல்வரவு மேடம்
ஆழ்ந்து படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
Post a Comment