Sunday, February 24, 2008

பின்னூட்டமிட விரும்பும் மென்பொருட்கள்:எச்சரிக்கை

என்னுடைய வலைப்பூவில் வழக்கத்திற்கு அதிகமாக ஒரே IP யிலிருந்து, அதிலிருக்கும் ஏறக்குறைய எல்லா பதிவுகளுக்கும் வருகை காணப்பட்டது. முதலில் சற்று மகிழ்சியாக இருந்தாலும் கூடவே சந்தேகமும் வந்தது. நாமென்ன தேவனா (துப்பறியும் சாம்பு) அல்லது சாண்டில்யனா, நம்முடைய எழுத்தை எவனாவது இப்படி விழுந்து விழுந்து படிக்க ! பின்னர் மின்னஞ்சலை திறந்து பார்த்தால் Duran என்பவரிடமிருந்து ஒரு பின்னூட்டம். அதைப் பிரித்தால் முக்கியமான செய்தி எதுவும் இல்லாமல் Publish, Reject என்ற Blogger குறிப்புகளுக்கு மேலாக அதே எழுத்துருவில் Warning or visit Here என்ற வலை இணைப்புகளோடு காணப்பட்டது.

அங்கேதான் அய்யா ஏமாந்து போய்விட்டேன். அது Blogger தரும் செய்தி என்று தெரியாத்தனமாய் க்ளிக்கித் தொலைத்தேன்.

அது உடனே XPvirusscan என்ற வலைக்குத்தாவி மின்னல் வேகத்தில் scan செய்து, என் கணிணினியில் மூன்று அபாயகரமான வைரஸ்கள் இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் பயமுறுத்தியது. Remove என்று ஆணை கொடுத்ததுமே ஒரு புது மென்பொருளை .exe ஐ தரவிறக்கம் செய்ய அனுமதி கோரியது என் கணிணி. அப்பா அந்த அளவிற்காவது ஒரு வேகத்தடை இருந்ததே என்று இப்போது சந்தோஷமடைகிறேன்.

உடனே அதை cancel செய்தேன். விடாகண்டன் மாதிரி அந்த ஜன்னல் மூட மறுத்தது. இன்னொரு ஜன்னலில் Cancel செய்தால் ஆபத்து என்கிற விதமாக புது செய்தி முளைத்தது. இப்போது கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய்விட்டது. கண்டிப்பாக இது ஒரு திருட்டு கும்பல் என்று புரிந்து விட்டது. கவலையே படாமல் அந்த வலைப்பக்கத்தை மூடிவிட்டு என் McAfee ஐ எல்லா கோப்புகளையும் மென்பொருட்களையும் ஒரு முறை புரட்டிப்பார்க்கச் சொன்னேன். அதற்கு தேவைப்பட்ட நேரம் 40 நிமிடங்கள்.

நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 40 நிமிட வேலையை 40 செகண்டுகளில் யாராவது செய்து 3 வைரஸ்களை பிடித்துத் தரமுடியுமா?

ஆனால் அந்த கும்பலை நமது நண்பர்கள் கண்டிப்பாக புரட்டி எடுக்க முடியும்.அவர்களது IP விலாசம் 161.107.18.136..McLean Virginia United States.

இந்த செய்தியை எல்லா சக பதிவாளர்களுக்கும் சொல்லி முளையிலேயே கிள்ளி எறிய அறிவுறுத்துங்கள்.

3 comments:

Thamiz Priyan said...

எனக்கும் இந்த பின்னூட்டம் வந்தது. அதை ரிஜக்ட் செய்து விட்டேன். நல்லவேளை தப்பித்தாயிற்று

வடுவூர் குமார் said...

This is happened when I was in linux...so escaped.

M.Rishan Shareef said...

இதே அனுபவம் எனக்கு தினமும் வாய்க்கிறது.
நான் Comment modaration செய்திருப்பதால் இவ்வகையான பின்னூட்டங்களை பதிவில் இட முன்பு அழித்துவிட முடிகிறது.
நீங்களும் செய்திருப்பீர்கள்.
உங்கள் பதிவு நன்று. பதிவர்களுக்கு அறிவுறுத்துவோம்.. :)