Sunday, February 24, 2008

இடுக்கண் களையும் இடுகம்பாளையத்தான்

இந்த இடுகை இடுமுன் பலமுறை இடுகம்பாளையம் ஆஞ்சநேயரைப் பற்றி கூகளில் தேடிப் பார்த்தேன். இடுகம்பாளையம் என்ற சொல்லே அதற்கு கிடைக்கவில்லை. ஆச்சரியம் கோவை மற்றும் ஆஞ்நேயர் என்று தேடியதில் வந்ததெல்லாம் நாமக்கல்லாரும் பீளமேட்டு ஆஞ்சநேயரும்தான்.

அதெப்படி வலைப்பதிவாளர்களின் பாசறையான கோவைக்கு அருகிலிருக்கும் இந்த ஜெயமங்கள ஆஞ்சனேயர் விட்டு வைக்கப்பட்டார் என்று புரியவில்லை. சரி நமக்கு அடிச்சது ஒரு மொக்கை பதிவுக்கு சான்ஸ் என்று துணிந்து விட்டேன்.

கோவையிலிருந்து சுமார் 35 கிமீ தூரத்தில், சிறுமுகைக்கு அருகே இருக்கும் ஜெய மங்கள ஆஞ்சநேயர் கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழையது.

இவர் ஒரு மணமான ஆஞ்சநேயர்.

அடடா! நான் சொல்லவந்தது அவர் ஊரைச் சுற்றி ஒரே ஜாதி மல்லி சாகுபடி. 2006-ல் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு புது பொலிவுடன் கோவிலும் பிரகாரமும் திகழ்கிறது. பிராகரம் முழுவதிலும் சிந்திக்கத் தக்க வாசகங்கள். அதுதான் இப்பதிவின் ஹைலைட்.

ஒரு சுற்று சுற்றி வந்து ஆஞ்சநேயரையும் தரிசித்துக் கொள்ளுங்கள். முறையான வைஷ்ணவ சம்பிரதாயத்துடன் பூஜை நடந்து வருகிறது.

அமைதியான தலம். தலவரலாறு தெரிந்து கொள்ளாமல் வந்து விட்டேன். அதை வேறொரு பதிவர்க்கு விட்டு வைக்கிறேன். :))










“கோபுர தரிசனம் பாபவிமோசனம்”




திக்கு நிறை புகழாளன் தீவேள்விச் சென்றந்நாள்
மிக்கபெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமாலடையாளம் அநுமான் என்று உச்சிமேல்
வைத்துக் கொண்டு உகந்தனளாள் மலர்குழலாள் சீதையுமே

-பெரியாழ்வார்

ஊக்கமுடமை ஆக்கத்திற்கு அழகு என்பதற்கு அனுமனை விட நல்ல சான்று கிடைப்பது அரிது. அதைப்பற்றி வேறொரு முறை பார்ப்போம்.

No comments: