Tuesday, June 19, 2007

கலாமுக்கு அனுப்பிய வாழ்த்து (மின்)அட்டை



திரு அப்துல்கலாம் 2002 ல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடனே ஒரு நாள் முழுதும் கணிணி முன் அமர்ந்து தயாரிக்கப்பட்ட மின் வாழ்த்து இது. விரிசுழல் அட்டை (animated card-மாற்று மொழிபெயர்ப்பு உண்டா ?) இருமுறை தான் செய்து காட்டும். மீண்டும் செயலிக்க இன்னொருமுறை சொடுக்கவும்.
அவருடையஆயிரக்கணக்கான அஞ்சல்களுக்கிடையில் இதற்கும் ஒரு பதில் வந்தது. அதுவும் ஒரு நன்றி அட்டை, 2020 க் கான கனவுகளோடு. கலாம் போன்றவர்கள் கனவு காண மாட்டார்கள். நம்மை முன்னோக்கோடு வழிகாட்ட விழைபவர்கள். அதைத் பின்பற்றுவதும் பற்றாததும் மக்கள் விருப்பம். அவரது பதிலைக் காண இங்கே சொடுக்கவும்.

2 comments:

சிவகுமார் said...

அட அருமையான மின் வாழ்த்து அட்டையை சிரமம் எடுத்து செய்து அனுப்பியுள்ளீர்கள். மீண்டும் அனுப்ப வாய்ப்பு கிடைக்கும் என்றே எண்ணுகிறேன்.

KABEER ANBAN said...

நன்றி சிவகுமார். கலாம் தேர்தலுக்கு நிற்காமல் வரவேண்டும் என்பதே என் விருப்பம். அவர் தேர்தலுக்கு நின்றால் அவருக்கும் பதவி ஆசை உண்டு என்ற அவப்பெயர் வந்துவிடுமோ என்ற கவலையும் உண்டு.