மாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை யூட்யூப் வீடியோக்களில் பார்த்த வண்ணம் இருந்தேன்.
என்னைக் கவர்ந்தது நீரியல் வளர்ப்பு என்றழைக்கப் பெறும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் செடிகளை வளர்க்கும் முறைதான்.
இம்முறையில் நீரின் தேவை மிகக் குறைவு. அதாவது 10% மட்டுமே !!!
மேலும் இது மண்ணில்லா வளர்ப்பு முறை. செடியின் வேர்கள் நேரடியாக நீருக்குள் சென்று வளர்ச்சியை கொடுக்கிறது.
ஆனால் என் தேடலில் இதை வெற்றிகரமாக தமிழகத்தில் செய்து வருபவர்கள் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதைத் தொழில் ரீதியாகத் தான் செய்யவேண்டுமே ஒழிய பொழுது போக்காக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலீடு செய்து கட்டுபடியாகாது.
எனவே இதனை எளிமைப்படுத்த வேண்டியது என் முதல் முயற்சியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இனி படிப்பதற்கு சுலபமாக கேள்வி-பதில் பாணியில் தருகிறேன்.
1) எளிமை படுத்த முடிந்ததா?
பரிசோதனையின் முதல் படியிலேயே வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. யூடியூபில் தேடியதில் சிலர் Kratky முறையில் சிறிய தொட்டிகளில் அல்லது பாட்டில்களில் ஊட்டக் கரைசலை விட்டு கீரை, காய்கறிகள் போன்றவற்றில் அதிக விளைச்சலை காண முடிவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இவை அத்தனையும் செயற்கை இரசாயன உரமாகக் காணப்பட்டது. என்னுடைய குறிக்கோள் இயற்கை உரங்களால் வளர்க்கப் படவேண்டும் என்பதாக இருந்தது. இது பரிசோதனைக்கு இரண்டாம் கட்டமாயிற்று.
2) முதல் கட்டத்தை தாண்டினீர்களா?
ஓரளவு ஆம் என்றே சொல்லலாம். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். எப்படி உபயோகமற்றது என்று தூக்கிப் போடும் தண்ணீர் பாட்டில்களை செடி வளர்ப்புக்காக பயன்படுத்தப் படுகிறது என்பதைக் காணலாம்.
நீரியல் முறையில் வளர்ப்பதற்காக வலை போன்ற சிறிய கிண்ணங்கள் விற்கப்படுகின்றன. மூன்று அங்குலம் உள்ள கிண்ணம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பொருத்தமாக இருக்கிறது. விதைகள் இளம் செடிகளாக இந்த வலைக்கிண்ணத்தில் வேர் விட்டதும் அவற்றை நீருள்ள பாட்டிலுக்கு மேலே அமர்த்தி விடலாம். எல்லா உயிர்கட்கும் இறைவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றல் காரணமாக வேர்கள் கீழறங்கி நீரை எட்டி விடுகின்றன. இதன் பின்னர் நாம் பாட்டிலில் நீரின் அளவை கவனித்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். வாரம் ஒரு முறை பார்த்துக் கொண்டால் போதும்.
3) ஆம் வேர் அடர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் எல்லாம் கீரை வகைகளாகவே உள்ளனவே?
கீரைகள் வேகமாக வளரும் என்பதால் முதலில் அவற்றை முயற்சித்தேன். இவை எனது நம்பிக்கையை பலப்படுத்த பெருமளவு உதவி செய்தன. ஒரு வகையில் உற்சாகம் ஊட்டுவதாகவும் இருந்தது. அதனால் தக்காளிச் செடியையும் “கிராட்கி” முறையில் வளர்த்துப் பார்த்தேன்.
சில நாட்களிலேயே இரண்டிற்கும் வித்தியாசம் புலப்படத் தொடங்கியது. தொட்டி மற்றும் பைகளில் வளர்ச்சி வேகம் அதிகமாகவும் நீரியல்-கிராட்கி முறையில் குறைவாகவும் காணப்பட்டது. ஊட்டச் சத்துக் குறைவாகிக் கூடாதென்று தினமும் கம்போஸ்ட் டீ எனப்படும் இயற்கை உரத்தை காலையிலும் மாலையிலும் நீரியல் பாட்டில்களுக்குக் கொடுத்தாலும் அதிக முன்னேற்றம் காணப்படவில்லை.
எனக்குத் தோன்றுவது செடியின் வேர் இயற்கையாக வளர வேண்டிய விட்டம் 8 அல்லது 10 அங்குலமாக இருந்து அதை மூன்று அங்குல அளவிலே குறுக்குவது ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. இது ஒரு பெரிய மரத்தை போன்சாய் தொட்டிக்குள் வளர்ப்பது போல எனலாம். ஆனால் செயற்கை இராசயன கரைசல்களில் இந்த பிரச்சனை இருப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை. ஆகையால் அதிக அளவு (இயற்கை) ஊட்டச்சத்து பெரிய பைகளில் கிடைப்பதாலும் இருக்கலாம் என்றும் தோன்றியது.
5) அப்படியானால் கிராட்கி முறை எதிர்பார்த்த பலனை தரவில்லை எனச் சொல்லலாமா ?
இப்போதே அதை முடிவு கட்டமுடியாது. அடுத்ததாக, வலைக்கிண்ணத்தின் விட்டத்தை தொட்டியின் அளவுக்கு (8 அங்குல அளவிற்கு) பெரிதாக்கி முயற்சிக்க இருக்கிறேன்.
6) அதனால் என்ன பயன்? கிண்ணம் பெரிதானால் அதில் நிரப்ப வேண்டிய தேங்காய் நார்கழிவும் அதிகம் தேவைப்படுமே ?
அதிகம் தேவைப்படினும் ஒரு தொட்டியில் இடப்படும் மண் (அல்லது நார்கழிவை) ஐந்தாறு பெரிய கிண்ணங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அடிப்படை நோக்கம் என்னவென்றால் பராமரிப்புத் தேவையை குறைத்துக் கொள்வதே. வேர்கள் நேராக நீரின் தொடர்பில் இருக்கும் போது நமக்கு நீர் மேலாண்மை சுலபமாகிறது.
7) இந்த குறைபாடு தக்காளிக்கு மட்டுமா ? கீரைகளில் வளர்ச்சி வித்தியாசப்படவில்லையா ?
கீரைகளிலும் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. உதாரணமாக தொட்டியில் பசலைக் கீரை (spinach) காட்டிய வளர்ச்சி வேகம் நீரியல் முறையை விட அதிகமாகவே இருந்தது.
8) இதில் நீர் மேலாண்மை நிலவரம் எப்படியிருந்தது ?
கண்டிப்பாக நீர் மிச்சப்படுகிறது. தெர்மோகோல் பெட்டியுள் நீர் 3 லிருந்து 4 அங்குல உயரம் எப்போதும் இருப்பதால் அதில் தினமும் நீர் ஊற்றத் தேவை இல்லை. ஆனால் தொட்டி வளர்ப்பில் மிக வேகமாக நீர் ஆவியாகி உலர்ந்து போவதால் காலையும் மாலையும் குறைந்தது அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை ஊற்ற வேண்டி இருந்தது. அந்த வகையில் நீரியல் வளர்ப்பில் கண்டிப்பாக சேமிப்பு இருக்கிறது.
9) வேறு ஏதாவது பயன் காணப்பட்டதா?
வளர்ச்சி சற்றுக் குறைவாக காணப்பட்டாலும் இலைகள் மிக ஆரோக்கியமாக வளர்கின்றன. எதிலும் பூச்சித் தாக்குதலோ வேறெந்த வகையான நோய் அறிகுறியோ தென்படவில்லை. வெயில் கடுமையாக இருந்தால் எடுத்து நிழலில் வைப்பது அல்லது மழை நேரத்தில் இடம் மாற்றுவது என்பது சுலபமாக இருந்தது.
10) நீரியல் வளர்ப்பு முறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன ?
வலைக்கிண்ணத்தில் உள்ள நார்கழிவுக்கு - மண்ணைப் போலல்லாமல் -திடத்தன்மை குறைவாக இருப்பதால் வேர்களுக்கு பிடிமானம் ஆரம்பநிலையில் போதுமானதாக இருப்பதில்லை. அதிகக் காற்று செடியின் நாற்றுகளை நிலைகுலையச் செய்கின்றன. அடுத்ததாக இதில் தரப்படும் ஊட்டச் சத்தின் அளவை நிர்ணயிக்க கடினமானதாக இருக்கிறது. நீரிலேயே இயற்கை உரங்களை கரைத்து கொடுக்கும் முயற்சியும் நம்பிக்கைத் தரவில்லை. அந்த கலங்கிய நீரில் பிராணவாயு குறைந்து செடிகள் வேர் அழுகல் நோயினால் தாக்கபட்டன. இதனால் எப்போதும் சுத்தமான நீரையே வேர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிறது. அப்போது தினசரி ஊட்டக் கரைசல் சொட்டு சொட்டாக கொடுக்கும் அவசியம் ஏற்படுகிறது. சற்று பெரிய அளவில் செய்யும் போது இதை சொட்டு நீர் முறைக்கு மாற்றி நார்கழிவில் உறிஞ்சப்பட்டு செடிகளுக்கு சேரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
வாசகர்களுக்கு நீரியலில் அனுபவங்கள் இருப்பின் அவசியம் பகிரவும். இது பலருக்கும் பயன்படும். அடுத்தக்கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் இதன் அடுத்த பகுதி வெளியாகும்.

( படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கலாம்)

4) இதற்கான காரணம் என்ன ?

3 comments:
ம்ம்ம்ம்ம் நோட்டட். நினைவில் வைத்துக்கொள்கிறேன்.
படிக்கும் போது ஆசையாக இருக்கிறது செய்து பார்க்க. இப்போது மொட்டை மாடி உபயோகத்திற்கு கொடுக்க மாட்டேன் எங்கிறார்கள் எங்கள் குடியிருப்பு வளாகத்தில்.
என் தங்கைக்கு சொல்ல போகிறேன்.
நன்றி தி வா சார்.
நன்றி கோமதி மேடம். வீட்டு பால்கனியில் ஒரு இரண்டு மணி நேரம் சூரிய ஒளி இருந்தாலும் போதும். சிறிய அளவில் முயற்சி செய்து பார்க்கலாம்.
Post a Comment