எப்பொழுது எங்கள் ”மாலை 2 காலை ” மின் பற்றாக்குறைக்குக் காரணம்
குளிர்பதனப்
பெட்டி என்று எனக்கு எண்ணம் ஏற்பட்டதோ
அப்போழுதே அதற்கான
பரிகாரம்
தேட ஆரம்பித்தேன்.
இப்பொழுதெல்லாம் நட்சத்திர
குறிப்புடன்
திறம் மிக்க குளிர்பதனப்
பெட்டிகள், அறை குளிரூட்டல், தண்ணீர் காய வைத்தல் போன்ற சாதனங்களுக்கு
வந்திருப்பதால் நம்முடைய
பழைய எந்திரங்களின்
திறனை
ஒப்பிட்டு
பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்ததில்
என்னுடைய
ஃபிரிட்ஜ்
எனப்படும்
குளிர்பதனப்
பெட்டி கிட்டத்தட்ட
மூன்று
மடங்கு சக்தியை உபயோகித்துக் கொண்டிருந்தது.
அதே
கொள்ளளவு
அதே வசதிகள் கொண்ட
அதே
கம்பெனியின்
இன்றைய மாடல் 3 ஸ்டார் ரேட்டிங்கில்
வருடத்திற்கு 265 யூனிட்கள் சக்தி மட்டுமே பயன்படுத்துகிறது எனக் கண்டு கொண்டேன்.
என்னுடைய ஃபிரிட்ஜ் வருடத்திற்கு
1000 யூனிட்கள்
விழுங்கிக் கொண்டிருந்தது.
இப்பொழுதெல்லாம் பற்றாக்குறை முழுவதுமாக
குறைந்து
போய் காலையில் 30% க்கும் அதிகமான சக்தி
மீதி
இருப்பதாக
பாட்டரியில்
காட்டுகிறது. முதலில்
திருஷ்டி
சுத்திப்
போடவேண்டும்.
கீழே உள்ள படத்தில் மின் கலத்தில் புதிய ஃபிரிட்ஜ் வந்த பின்பு இன்னமும் 20% சேமிப்பில் அதிக மிச்சம் இருப்பதைக் காணலாம். இது நிலைமை எவ்வளவு சீரடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
கீழே உள்ள படத்தில் மின் கலத்தில் புதிய ஃபிரிட்ஜ் வந்த பின்பு இன்னமும் 20% சேமிப்பில் அதிக மிச்சம் இருப்பதைக் காணலாம். இது நிலைமை எவ்வளவு சீரடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆகையால் உங்கள் வீட்டில் பழைய பிரிட்ஜ் இருந்தால் – 12 வருடங்களாக தொந்தரவு கொடுக்காமல் வேலை செய்கிறது என்று பெருமை பேசாமல் –அது எவ்வளவு யூனிட் சக்தி இழுக்கிறது என்பதை பாருங்கள்.
என்னுடைய
ஃபிரிட்ஜ்ஜும்
தொந்தரவு
எதுவும் கொடுக்காமல்தான் ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால்
அதுவே எவ்வளவு சக்தியையும் பணத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தது. மின்வாரிய
இணைப்பாக
இருந்தால்
-வருடம் 1000 யூனிட்டுக்கு
ரூ.
5000 செலவு
செய்கிற இடத்தில்
ரூ 1500 தான்
புது
ஃபிரிட்ஜ்
ஜினால் செலவாகும்.
இது
மிகப்பெரும்
லாபமாகும்.
எப்படியோ டிமாண்ட்
என்னும் ‘மாமியாரை, திருப்திப் படுத்தி யாகி விட்டது.
சரி சப்ளை என்னும் ‘மருமகள்’ எப்படி ? சுணக்கம்
தான்.
ஒருநாளைக்கு
சராசரி 7 யூனிட்டுக்கு குறையாமல் உற்பத்தியாகிக் கொண்டிருந்த மின்சக்தி இப்போது
10 லிருந்து
15 சதம்
குறைந்து 6 லிருந்து 6.2 யூனிட்டுகளுக்கு குறைந்து விட்டது.
அதாவது பழைய
ஃபிரிட்ஜ்
போனதிலிருந்து
தேவை குறைந்து மின்கலத்தில் சேமிக்க முடியாத அளவிற்கு உற்பத்தி பெருகி வந்து கடைசியில் பவர் கண்ட்ரோலர் உற்பத்தியையே நிறுத்தி விடுகிறது. முழு திறனில் வேலை செய்தால் 8 யூனிட்கள் உற்பத்தியாக
வேண்டிய து 6 யூனிட்கள் தான் செய்கிறது. அந்த உபரி தினத்திற்கு
2 யூனிட் –வருடத்திற்கு 700 யூனிட் குறைந்தது ரூ. 3500 பெறுமானமுடையது. இது ஒரு வகையில் நட்டம்.
“என் மருமகப் பொண்ணு தூங்கியே காலங்கழிக்கிறா” என்ற மாமியாரின் பொருமல் கேட்டால் “ நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா கண் உறுத்துமே !” என்று மருமகள் முணுமுணுப்பதையும் காதில் வாங்கிக் கொண்டு பேசாமல் நகர வேண்டும்,
இதை சரிகட்டப் போனால் மேலும் பணம் செலவழிக்கத் தயாராக
வேண்டும்
குரங்கு மாற்றி
மாற்றி ரொட்டித் துண்டை பங்கு போட்ட கதை நினைவிற்கு வருகிறதா? வந்தாலும் பொருத்தமே. கதையில் குரங்கிற்கு வயிறாவது
நிரம்பியது. இங்கே என்னுடைய பர்ஸ் தான் காலியாகிக் கொண்டிருக்கிறது. J)))
ஏதோ
வீடு அமைதியாக இருந்தால் போதும் யாராவது ஒருவர் கொஞ்சம் அடங்கி போனால்தான் நடக்கும் என்னும்
கொள்கையை
பின்பற்றி
உற்பத்தி
கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நமது தேவையை பூர்த்தி செய்தால் போதும் என்று சிறிது நாட்களுக்கு சும்மா இருக்கப் போகிறேன் !
3 comments:
வாழ்த்துகள்.
சூரியபகவான் தயவில் இதுவரை சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
ஆசிகளுக்கு நன்றி
நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
Post a Comment