பொறுமைக்கு பூமியை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். மனிதர்கள் அதை பல விதமான வழிகளில் தவறாகப் பயன்படுத்தினாலும் அவள் தவறாது அவர்களையும் பிற ஜீவராசிகளையும் தொடர்ந்து சீராட்டி வருகிறாள்.
Adopt the pace of nature: her secret is patience. - Ralph Waldo Emerson (1803-1882)
DV குண்டப்பா வேறொரு வகையில் அவளுடைய பெருங்குணத்தை சுட்டிக்காட்டி அவளைப் போல் துன்பங்களைத் தாங்கச் சொல்கிறார்.
Adopt the pace of nature: her secret is patience. - Ralph Waldo Emerson (1803-1882)
DV குண்டப்பா வேறொரு வகையில் அவளுடைய பெருங்குணத்தை சுட்டிக்காட்டி அவளைப் போல் துன்பங்களைத் தாங்கச் சொல்கிறார்.
பூமி தனக்குள் உலகையே அழித்து விடக்கூடிய உஷ்ணத்தை அடக்கிக் கொண்டு மேலே உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் குளிர்ச்சியாய் இருப்பது போல், அடக்க முடியா கோபம் நம்முள் -பலரது கீழ்மையைக் கண்டு -பொங்கும் போதும் அதை தாங்கிக் கொள்ள வேண்டியதாகிறது. நியாயமான கோபமே ஆனாலும் எல்லா சந்தர்பங்களிலும் அதை வெளிப்படுத்த முடியாது, கூடாது. வெளிப்படுத்தினால் நன்மை உண்டாகாமல் போகலாம்.
எப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.
எப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.
எனது மொழியாக்க முயற்சி:
பிணிகளுக்கு எல்லாம் மருந்து கண்டவர் ஏது?
மனிதர்தம் கீழ்மைக்கு எல்லாம் தீர்வும் ஏது?
தண்மையுடன் பற்கடித்து பொறு, அவ்வப்போது;
தணியா வெம்மை அடக்கிய பூமிபோல- மக்குத் திம்மா
Patience serves as a protection against wrongs as clothes do against cold. For if you put on more clothes as the cold increases, it will have no power to hurt you. So in like manner you must grow in patience when you meet with great wrongs, and they will then be powerless to vex your mind.
- Leonardo da Vinci, painter, engineer, musician, and scientist (1452-1519)
பொறுத்திருந்தால் புல்லும் பாலாகும் - சரண்சிங்
----------------------
4 comments:
எப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.//
உண்மை அமைதி காப்பதே நல்லது .
பொறுத்தார் பூமி ஆள்வார், என்று சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள்.
பொறுமைக்கு எல்லை உண்டு என்று சொல்வர் சிலர், எல்லை வகுக்க கூடாது பொறுமை கடலினும் பெரிது.
எது வந்த போதும் பொறுமையை கை கொள்பவன் எல்லோராலும் போற்றப் படுவான்.
// சினம் அச்சம் இரண்டும், ஒரு மனிதன் வாழ்வில் சீர்குலையச் செய்யும் கொடும் உட் தீயாகும்.//
மகரிஷி.
வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.
நல்வரவு கோமதி மேடம்,
//வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.//
மிகவும் உண்மை. வாசிப்பிற்கும் மகரிஷியின் அருள் வாக்குக்கும் மிக்க நன்றி
அறிய வேண்டிய அற்புதமான பதிவு
'அம்மாளைத் தந்த அம்மாள்' என்ற எனது
பதிவில் "இந்திய இலக்கிய சிற்பிகள்" புத்தகத்தின் வெளியீட்டாளர்கள்
யார்? என தாங்கள் கேட்டிருந்தீர்கள்,
அதன் வெளியீட்டாளர் "சாகித்ய அகாதமி,எல்டாம்ஸ் ரோட்,தேனாம்பேட்டை"
மும்பையிலும் டெல்லியிலும் கிளைகள் உள்ளன.
தங்களின் இந்த கேள்வியை மையமாக வைத்து
நான் "இந்திய இலக்கிய சிற்பிகள்' என்று புதிதாக ஒரு
பதிவு போட்டுள்ளேன்.முடிந்தால் படிக்கவும்
http://suharaji.blogspot.com/2011/03/blog-post_05.html
Post a Comment