பொறுமைக்கு பூமியை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். மனிதர்கள் அதை பல விதமான வழிகளில் தவறாகப் பயன்படுத்தினாலும் அவள் தவறாது அவர்களையும் பிற ஜீவராசிகளையும் தொடர்ந்து சீராட்டி வருகிறாள்.
Adopt the pace of nature: her secret is patience. - Ralph Waldo Emerson (1803-1882)
DV குண்டப்பா வேறொரு வகையில் அவளுடைய பெருங்குணத்தை சுட்டிக்காட்டி அவளைப் போல் துன்பங்களைத் தாங்கச் சொல்கிறார்.
Adopt the pace of nature: her secret is patience. - Ralph Waldo Emerson (1803-1882)
DV குண்டப்பா வேறொரு வகையில் அவளுடைய பெருங்குணத்தை சுட்டிக்காட்டி அவளைப் போல் துன்பங்களைத் தாங்கச் சொல்கிறார்.
பூமி தனக்குள் உலகையே அழித்து விடக்கூடிய உஷ்ணத்தை அடக்கிக் கொண்டு மேலே உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் குளிர்ச்சியாய் இருப்பது போல், அடக்க முடியா கோபம் நம்முள் -பலரது கீழ்மையைக் கண்டு -பொங்கும் போதும் அதை தாங்கிக் கொள்ள வேண்டியதாகிறது. நியாயமான கோபமே ஆனாலும் எல்லா சந்தர்பங்களிலும் அதை வெளிப்படுத்த முடியாது, கூடாது. வெளிப்படுத்தினால் நன்மை உண்டாகாமல் போகலாம்.
எப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.

எனது மொழியாக்க முயற்சி:
பிணிகளுக்கு எல்லாம் மருந்து கண்டவர் ஏது?
மனிதர்தம் கீழ்மைக்கு எல்லாம் தீர்வும் ஏது?
தண்மையுடன் பற்கடித்து பொறு, அவ்வப்போது;
தணியா வெம்மை அடக்கிய பூமிபோல- மக்குத் திம்மா
Patience serves as a protection against wrongs as clothes do against cold. For if you put on more clothes as the cold increases, it will have no power to hurt you. So in like manner you must grow in patience when you meet with great wrongs, and they will then be powerless to vex your mind.
- Leonardo da Vinci, painter, engineer, musician, and scientist (1452-1519)
பொறுத்திருந்தால் புல்லும் பாலாகும் - சரண்சிங்
----------------------