
[படம் நன்றி : இண்டியா பிக்ஸ் டாட் காம் ]
வெள்ளி விழா, பவழ விழா எல்லாம் கொண்டாடுவதும் இதை நினைவூட்டத்தானே. நமக்கென்று ஒரு வேர் இருக்கிறது. அது கலாசாரத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களை நல்வழிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.
ஏதோ ஒரு காரணத்தினால் இலைகளை பூஞ்சான் நோய் தாக்கினாலும் பெரிய மரம் அவற்றை உதிர்த்து விட்டு மீண்டும் புதிதாக தளிர் விடத் தொடங்குகிறது. அப்படி உயிர்த்து வரும் புது நம்பிக்கை ’மரத்தின் ஆழமான வேர்களால் அல்லவோ’ என்று DVG இந்த இடுகையின் பாடலில் விளக்குகிறார்.
ஏதோ ஒரு காரணத்தினால் இலைகளை பூஞ்சான் நோய் தாக்கினாலும் பெரிய மரம் அவற்றை உதிர்த்து விட்டு மீண்டும் புதிதாக தளிர் விடத் தொடங்குகிறது. அப்படி உயிர்த்து வரும் புது நம்பிக்கை ’மரத்தின் ஆழமான வேர்களால் அல்லவோ’ என்று DVG இந்த இடுகையின் பாடலில் விளக்குகிறார்.
புதுத்தளிரும் பழவேரும் மரத்திற் கழகு
புதுயுக்தி பழந்தத்துவம் வாழ்நெறிக் கழகு
புதுஞானம் மெய்ஞானம் இணைதலு மழகு
இதுமேன்மை மனிதருக்கே- மக்குத் திம்மா
புதுயுக்தி பழந்தத்துவம் வாழ்நெறிக் கழகு
புதுஞானம் மெய்ஞானம் இணைதலு மழகு
இதுமேன்மை மனிதருக்கே- மக்குத் திம்மா
(பழவேர் = பழமையான வேர்)
மனித குலத்துக்கு புதுப்புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் அவசியம். அவை புதுத் தளிர் போல. சூரிய ஒளியிலிருந்து இலைகள் எப்படி ஒளிசக்தியை மரத்திற்கான ஊட்டச் சத்தாக மாற்றுகின்றனவோ அப்படி புது யுக்திகள் நம் வாழ்க்கையை உயிர்ப்புடனும் துடிப்புடனும் இயங்கச் செய்கின்றன. ஆனால் அதற்கு அந்த சக்தியை வழங்குவது மரத்தின் ஆழமான வேர்கள் என்பதையும் மறக்கலாகாது. ஆன்மீகத்தின் மூலம் கண்டறியப்பட்ட அற நெறி வாழ்க்கையையும் கை விட்டு விடலாகாது. எப்போதும் பழமையுடன் புதுமை கலந்து இயங்குவதே மனிதகுலத்துக்கு மேன்மை தரும் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் DVG.
கீழே உள்ள பழைய மரத்தில் ஒரு சிற்பி பல்விதமான பறவைகள், மிருகங்கள், ஊர்வன செதுக்கி இருக்கி இருக்கிறான். உங்களால் எவ்வளவு கண்டு பிடிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள். பழமையில் புதுமை !!

இது தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் பழைய மரம். பெரிய படத்தைக் காண இங்கே சுட்டவும்.