இது அப்படியொன்றும் பிரம்மவித்தையல்ல. :) கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் அவ்வளவுதான்.
மேலும் சிலவற்றை செய்யும் முன் விவரம் அறிந்த வாசகர்களின் கருத்தை அறிந்து சீர்படுத்த விழைகிறேன். இந்த விட்ஜெட்களை தங்கள் igoogle பக்கத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பொருத்தி வாசகர்களுக்கு பயன்படுமாறு செய்யலாம்.
முதுமொழி காஞ்சி, உலகநீதி, பராபரக்கண்ணி இப்போது தயார்.
(மேலுள்ள இணைப்பைச் சுட்டினால் முழு விவரங்களும் அறியலாம்)
கடந்த ஒரு வருட காலமாக பரிசோதித்து இணைப்பில் அவ்வப்போது வந்த பல குறைகளை களைந்து வெளியிடுகிறேன்.
மேலும் சிலவற்றை செய்யும் முன் விவரம் அறிந்த வாசகர்களின் கருத்தை அறிந்து சீர்படுத்த விழைகிறேன். இந்த விட்ஜெட்களை தங்கள் igoogle பக்கத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பொருத்தி வாசகர்களுக்கு பயன்படுமாறு செய்யலாம்.
[படத்தை சுட்டி பெரிதாக்கி பார்க்கலாம்]
நம் வலைப்பூவின் அமைப்புக்கு ஏற்ப உயர அகலங்களை மாற்றிக் கொள்ள கூகிள் வகை செய்கிறது. அதற்கான விவரங்களும் மேலே கொடுக்கப்பட்ட இணைப்பில் உள்ளது.
ஸ்ரீ ரமணரின் உபதேச சாரத்தையும் தமிழ் பொருளுடன் தருவதற்கும் முயற்சி செய்திருக்கிறேன். [ http://tinyurl.com/ramanawidget ]. இது தினம் ஒரு கருத்தாக முப்பது பாடல்களையும் முப்பது நாட்களில் படிக்க வகை செய்கிறது. மனப்பாடம் செய்ய விரும்புவர்களுக்கு igoogle-ல் பொருத்திக் கொள்வது பயனளிக்கும்.
தட்டச்சுப் பிழை, பொருட்பிழை போன்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அப்படியே விட்ஜெட்டை பொருத்தியபின் அதை பின்னூட்டத்திலோ தனிமடலிலோ தெரிவித்தால் மகிழ்வேன்.
தட்டச்சுப் பிழை, பொருட்பிழை போன்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அப்படியே விட்ஜெட்டை பொருத்தியபின் அதை பின்னூட்டத்திலோ தனிமடலிலோ தெரிவித்தால் மகிழ்வேன்.
3 comments:
தமிழ்க் கருவூலம்
உண்மையிலே அரிய முயற்சி
வாழ்த்துகள்
நல்வரவு திகழ்
வாழ்த்துகளுக்கு நன்றி
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
Post a Comment