திடீரென்று ப்ளாகர் பின்னூட்ட வார்ப்பு கட்டமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்பெல்லாம் முன்னோட்டம்(preview) மஞ்சள் வர்ணத்தில் பிற பின்னூட்டங்களுக்கு கீழே காட்டப்பட்டு வந்தது. இப்போது தனி பெட்டியில் திரைக்கு நடுவே பெரிய எழுத்துகளில் பயமுறுத்துவது போல் zoom செய்து காட்டுகிறது.
போகட்டும். இன்னொரு பிரச்சனை-இந்த மாற்றம் எதைப் பற்றியது என்றால் பிற வலைப்பூ இணைப்பு நிரல்களை(hyper links) சேர்க்க முடியவில்லை. கீழே உள்ள படத்தை காணுங்கள்.
இதில் "http" not allowed என்று வருகிறதே :(
முன்பெல்லாம் சர்வ சாதாரணமாக மேற்கண்ட முறையில் இணைப்பு கொடுக்க முடிந்தது. இப்போது ஒட்டு மொத்தமாக அந்த நிரலை நிராகரிக்கிறது.
சரியென்று நிரலில் “http://" பகுதியை மட்டும் நீக்கிவிட்டு செய்தால் ஏற்றுக்கொண்டது. ஆனால் அப்படி வரும் இணைப்பைச் சுட்டினால் ‘Page Not Found' என்ற பக்கத்திற்கு இட்டுச் செல்கிறது ?????
இதற்கு ஏதாவது நாட்டுமருந்தோ, அலோபதியோ, ப்ளாகர்பதியோ தெரிந்தால் சொல்லுங்களேன்,ப்ளீஜ்ஜ்ஜ் :))
2 comments:
நீங்க கொடுத்திருக்கற html கோடிங்க் தப்புன்னு நினைக்குறேன் தலைவா. அதை சரி செஞ்சு பாருங்க!
சென்ஷி
சரியா கவனிச்சு பாருங்க. http not allowed ன்னு சொல்லுது. கோடிங்-ல தப்பு இருந்தா error in tags அப்படின்னு வேற மாதிரி குறிப்பு வரும்.
Post a Comment