Tuesday, April 15, 2008

கிட்டு மாமா -சூஸி மாமி

கோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக.

நிகழ்சி : கிட்டு மாமா -சூஸி மாமி

கிட்டுமாமா : ஏண்டீ சூ..ஸீ ... சேதி கேட்டியோ ?

சூஸி மாமி : என்ன கிட்சூ ?

கி.மாமா.: எல்லா கவன்மெண்ட் ஆபீசுலேயும் ஒவ்வொரு வெள்ளிக் கெளமை அன்னைக்கும் வேஷ்டிதான் கட்டிண்டு வரணுமாம்.
காலேஜுக்கு போற லெக்சர் ப்ரொபசர்களும் ஸ்டூடென்ஸும் கூட அப்படித்தானாம்.

சூஸி மாமி: லேடிஸ் கூடவா கிட்சூ ;)

கி.மாமா : போடீ பைத்தியம். அவா பொடவ கட்டிக்கணுமாக்கும்

சூஸி மாமி : இது என்னா கிட்சூ இப்படி புது லா எல்லாம் போட்டிருக்காங்கோ ?

கி.மாமா : நோக்கு எங்க புரியப் போறது ;) ஆனாலும் சொல்றேன் கேட்டுகோ. இந்த கைத்தறி நெசவாளரெல்லாம் இருக்காளோ இல்லியோ...

சூஸி மாமி : அது என்னா மேன் கைத்றி நேசம்..

கி.மாமா : ஆமாண்டி நேசம் தான். ஒளெரினாலும் மொதத் தடவயா அர்த்தத்தோட ஒளரி இருக்கே. கைத் தறி.. தறி அப்படீன்னா ஹாண்ட்லூம் வீவர்ஸ் இருக்காளோ இல்லியோ, பாவம் அவாளாடோ தயாரிப்பெல்லாம் யாருமே வாங்கறதே இல்லியாம். இப்ப எல்லாரும் லெவி ஜீன்ஸ், ந்யூபொர்ட் அப்படீன்னு ஜீன்ஸ் போட்டுண்டு சுத்தறாளோன்னோ இவாளுக்கு மார்க்கெட் டல்.

சூஸி மாமி: அப்போ அவங்கலயும் ஜீன்ஸ் மானுவாக்ச்ர் பண்ண சொல்ரதுதானே கிட்சூ.

கி.மாமா :அடி முண்டம். ஜீன்ஸை யாராவது கையில நெய்ய முடியுமாடி. அதுக்கு பெரிய பெரிய மெஷின் வேணும். அதெல்லாம் இம்போர்ட் பண்ணனும். அதெல்லாம் இவாளால முடியற காரியமாடி? அதனாலே தான் இந்த புது சட்டமாக்கும்.

சூஸி மாமி : ஒருநாள் வேஷ்டி, பொட்வே கட்னா மார்கெட் வந்துருமா கிட்சூ ?

கி.மாமா : அடி போக்கத்தவளே. பாவம் அவாளுக்கெல்லாம் ஏதோ கொஞ்சம் ஹெல்பா இருக்கட்டுமேன்னு அரசாங்கத்துல ரொம்ப யோசிச்சு ஏதோ செய்யப் பாத்தா நீ எடக்கு மடக்கா கேள்வி கேக்றியே !

சூஸி மாமி : அப்படியில்லே கிட்சூ. இப்போ ஹெல்மெட் போடாட்டா ஃலைப்க்கு டேஞ்சர். அதனாலே ஹெல்மெட் போடணுமின்னு சொல்லி பப்ளிக்குக்கு ஹெல்ப் பண்ண ஒரு ரூல் வந்துச்சே கிட்சூ...

கி.மாமா: ஓ.ஓ..ஓ!! நீ அங்க போயிட்டியாக்கும் !....... சூ...ஸீ.. சும்மா சொல்லப்படாது.. டீ. நீயும் ரொம்ப சுயமா யோசனை பண்ணக் கத்துண்டுட்டாய். இதக்கப்புறம் ஒன்னோட பேசப் படாது..

------விளம்பர இடைவெளிக்குப் பின் பாடல் ஆரம்பிக்கிறது------------

(இந்த நிகழ்ச்சி சூரியன் FM-ல் தினமும் காலையில் அன்றாட செய்தி துணுக்குகளை அலசும் விதமாக ஒலிபரப்பப்படுவது. கோவை பெருமக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நிகழ்ச்சி)

4 comments:

தமிழ் said...

:))))))))))))))))

KABEER ANBAN said...

நன்றி திகழ்மிளிர்.
திகழ்மிளிர் என்பதற்கு பொருள் கொள்வது எப்படி? 'மிளிர்கின்ற சிறப்பு' என்று கொள்ளலாமா? :))
கபீர் வலைப்பூவையும் விரும்பி படிப்பதற்கு நன்றி.

manjoorraja said...

வந்துட்டொம்லெ......

KABEER ANBAN said...

அப்பாடா! மஞ்சூரண்ணனுக்கு நம் வலைப்பூக்கு வழிதெரிந்து விட்டது. என்ன இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம் :)))
அது என்ன கோயம்புத்தூர் பேர் போட்டால்தான் வசியமா? :)
அடிக்கடி வாங்க, நன்றி