Tuesday, October 30, 2007

ஒலிநாடா to Mp3 -பகுதி 3

இந்த பதிவில் பழுதாகியுள்ள ஒரு ஒலிப்பதிவை, நீங்களே audacity ஐ உபயோகித்து சரி செய்து பார்க்க ஒரு அனுபவ பாடம்.

அதற்குமுன் சில கூடுதல் தகவல்கள்.audacity -ல் streaming audio வையும் online ஒலிப்பதிவு செய்யலாம். அதற்கு version 1.2.6 -ல் Wave-out-mix என்ற மெனுவை தேர்வு செய்யுங்கள். இது Tool Bar-ன் வலது மூலையில் இருக்கும். வலைத்தளத்திலிருக்கும் ப்ளேயலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் பொழுது audacity -ன் Record பொத்தானை இயக்கிவிடுங்கள். பிரமாதமாகப் பதிவாகும். ப்ராட் பேண்ட் இருந்தால் மிக்க நலம். துண்டித்தல் இல்லாமல் சீரான பதிவு கிடைக்கும். துண்டு துண்டாக பதிவானால் அதை அனுபவ பாடத்தில் விளக்கியுள்ளது போல் சரி செய்து கொள்ளலாம்.

அது போலவே கணிணியில் C D ஐ Media player-ல் பாடவிட்டு நேரடி ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் இப்பொழுதல்லாம் Media Player லேயே CD ripping இருப்பதால் இது பெரிய விஷயமில்லைதான். ஆயினும் அதை Mp3 க்கு மாற்றுவதற்கு audacity-ன் உதவி வேண்டியிருக்கும். நேரடியாக பாடவிட்டு பதிந்தால் Mp3 ஆகவே சேமித்துக் கொள்ளலாம்.


audacityயிலும் பாடல் முடிந்தவுடன் STOP 'n' RECORD செய்தால் தனித்தனி track -க்குகளை ஒன்றின் கீழ் ஒன்றாக உருவாக்கிக்கொண்டு சேமித்துக் கொள்கிறது. ஆனால் audiograbber போல் auto save கிடையாது. ஆகையால் கடைசியில் தனித்தனியாக Export as Mp3 என்று கட்டளையிட்டே சேமிக்க வேண்டியிருக்கிறது.

மேலும் ஏதாவது கவனிக்காமல் விட்டிருந்தால் அதிக அனுபவமுள்ள வாசகர்கள் எல்லோரின் பயன் கருதி தெரிவிக்கவும்.

இப்போது அனுபவ பாடத்திற்கு வருவோம் (Practicals)

கீழே உள்ள மாதிரி-1 ஐ தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இது இரண்டு நிமிடமே ஓடக்கூடியது. (மூலப்பதிவு- 5 1/2 நிமிடம்). அதில் 28 ஆவது நொடியிலிருந்து 54 ஆவது நொடிவரையிலான பதிவு பழுதாகியுள்ளது. இதற்கு காரணம் நாடாவில் இருந்த குறைபாடே. (esnip உறுப்பினராக இல்லாவிட்டால் கூட மேலே குறிப்பிட்டுள்ளபடி தரவிறக்கம் செய்ய முடியும்).
மாதிரி-1
Get this widget | Track details | eSnips Social DNA


தரவிறக்கம் செய்த கோப்பை audacity ல் திறந்து கீழே காட்டப்பட்டுள்ள படவிளக்கத்தைப் பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள். குறைபாடுகள் உள்ள பகுதிகளில் அலைப்பதிவுகள் துண்டு துண்டாக காட்சியளிக்கிறது. படிப்படியாக zoom செய்து நாம் அந்த பகுதிகளை கண்டறிய முடியும். பின்னர் அந்த zoom மெனு-வை வைத்தே மிகச் சரியாக வெற்று பகுதிகளை வெட்டி எறிய முடியும்.


பட விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நேரக்கணக்கு முழுபதிவின் படி கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 52 துண்டுகள் 25 நொடிக்கான பழுதில் காணப்பட்டன.

இது வாத்திய இசையாகையினால் நான் மொத்த நீளத்தையும் வெட்டி எறிந்துவிட்டேன். அதுவே வார்த்தைகள் கூடிய பாடலானால் சற்று நிதானமாக ஒவ்வொரு blank space-யும் தனித்தனியாக வெட்டி எறிய வேண்டும். இது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை. கொஞ்சம் பொறுமை வேண்டும். அவ்வளவு தான்.

மாதிரி-2 கேட்டுப்பாருங்கள். 28 ஆவது நொடிக்குப்பின் வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு இயல்பாகத் தொடர்கிறது இசை ஓட்டம்.
zoom menu மிகவும் பயனுள்ள ஒரு கருவி. இதை நல்ல விதத்தில் பயன்படுத்தப் பழகினாலே ஒலிப்பதிவு நுட்பத்தில் ஒரு படி மேலே போய்விட்டோம் என்று வைத்துக்கொள்ளலாம்.

மாதிரி 2
Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

வடுவூர் குமார் said...

இப்ப தான் free recorder என்கிற tool bar வந்துவிட்டதே.. நேரடியாக mp3 வில் record ஆகிறது.

கபீரன்பன் said...

தகவலுக்கு நன்றி குமார். பொதுவாக நான் tool bar programme களை விரும்புவதில்லை. பயம் தான் காரணம். அவர்கள் என்னதான் spyware adware கிடையாது என்று சொன்னாலும் எனக்கு நம்பிக்கை வருவதில்லை. அதுபோல program files install ஆகும் freeware களையும் தவிர்ப்பேன். Audacity is a standalone program. அது C driveல் install ஆவதில்லை. அது ஒரு Editing tool கூட. அதனால்தான் Audigrabber ஐ விட எனக்கு தனிப்பட்ட முறையில் audacity பிடித்து இருக்கிறது.
நீங்கள் சொன்ன தகவல் பலருக்கும் உபயோகமாயிருக்கும்.
நன்றி.