ஒரு சின்ன கரீக் -ஷன். நேத்திக்கு போட்ட டமாரத்தில ஒரு பொத்தல். அங்கே web site க்காக கொடுத்த லிங்க் சரியா வேலை செய்யவில்லை. கவனிக்காம விட்டது என் தப்புதான். இப்ப சரி பண்ணியாச்சு. வந்து ஏமாந்தவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். இன்னொரு தபா இங்கேயும் குடுத்துடறேன்.
www.pdstext.com
நன்றி வடுவூர் குமார்.
Thursday, March 29, 2007
Wednesday, March 28, 2007
ஆறு பாஷை ஒரே பொட்டிக்குள்ள- தட்டி பாரு
அப்பிடீ ரவுண்டு அடிச்சுகினு, வலெயிலதாம்பா, வரும் போது ஒரு நல்ல விசயத்தப் பாத்தேன். அத்தெ அல்லாருக்கும் டமாரம் அடிச்சுட்டு போலாம்னு நிக்குறேன். சாமியோவ் ஒரு விசயம். இப்ப நா சொல்லப் போற பார்ட்டீக்கும் எனக்கும் ஒப்புராண ஒரு கனீக் ஷீனும் கெடயாது. அவுங்க நல்ல மனசோட செய்ற காரியத்த யாரச்சும் சொன்னாத்தான நாலு பேருக்கு தெரியும்ங்கிற நெனப்புல சொல்றேன். அவ்ளோதான். யாராச்சும் முன்னாடியே சொல்டாங்களா? பராவாயில்ல. இன்னொருவாட்டி கேட்டுக்க.
சரி விசயத்துக்கு வருவோம். PDS TEXT ங்கற சென்னை கம்பெனி ஒண்ணு கீது. அவுங்க ஒரு இலவச சேவை குடுக்கறாங்க. அது தான நமக்கும் வேணும். நீங்க, அவுங்க வலைத் தளத்துல பதிஞ்சுட்டா அப்புறம் ஆறு பாஷையில லட்டர் டைப் அடிச்சி அங்கனயிருந்தே அப்படியே மெய்ல் அனுப்பிடலாம். இதன்ன பெரீய்ய்ய்ய விசயம். அத்தான் ரீடிஃப் சிஃபி, ஈ-பத்ரா அல்லாரும் குடுக்குறாங்குளேன்னு சொல்றீங்களா. வித்தியாசம் இதுதாங்கோ.
இது வெறும் லட்டர் எளுத மட்டுமில்லெ. இந்த மாதிரி பெரிய பெரிய சமாசாரத்தையும் தனித்தனி ஃபைலா அங்கேயே சேவ் பண்ணிக்கலாம். அல்லாம் யூனிக்கோடு. அத்துல இதுதாங்க அட்வான்டேஜு. திரும்ப எத்தினி நா களிச்சு வந்து வேண்ணாலும் பாத்துகலாம், திருத்திக்கலாம். அட டிலீட்- டும் பண்ணிக்கலாம்.நேத்திக்கு பெங்களூரூ ல்ல பாதில விட்ட வேலயெ அடுத்த நா ஹைதராபாத்தோ டெல்லியோ எங்க வேண்ணாலும் உக்காந்து முடிச்சுக்கலாம்.
ஒரே பொட்டிக்குள்ள பல பாஷயில எளுதலாம். எப்ப வேணும்னாலும் பாஷய மாத்திக்கலாம். என்னெ மாதிரி கபீருக்காக இந்திலேயும் எளுதனும் தமிளும் எளுதனும்-ந்னு இருக்கக் கூடிய மனுசனுங்களுக்கு ஒரே பாக்ஸ்-ல ரெண்டையும் செய்ற வசதி பெரிய விசயமுங்க.
அப்புறமா, நீங்க ஒங்களோட ஃபைல் டௌன் லோடும் பண்ணிக்கலாம். லட்டர் அடிக்கும் போது சைஸ் மாத்றது, போல்ட், புல்லட் அல்லாமும் இருக்கு. அவசியப்பட்டா ஹைபர் லின்க் குடுக்கிற வசதியும் இருக்கு. இப்படீ பலான சௌகரியமெல்லம் கீது. நீங்களே போயி பாத்துக்கிடுங்க.
இன்னா வரட்டுமா? ஒடம்ப பாத்துக்குங்க. ரைட்டா !
அட, ஒரு விசயத்த மறந்துட்டம்பா. டைப் அடிக்கையில அப்பப்போ சேவ் போட்டிகினே இரு. இல்லாட்டி டைம்-அவுட் சொல்லாம பண்ணிடும். நீ பெரீசா எழுதிகீனேஏ..இருப்பெ. அர்ரெமண்நேரம் ஓடி பூடும். நீ ஜம்பமா சேவ் அழுத்தினன்னு வச்சுக்க அம்பேல். அத்தனையும் போச்சு. LOG-In. மீண்டும் வருக. அதாவது புச்சா உள்ளே நுளை ன்னு அர்த்தம். உள்ளே போனா ஒண்ணும் இருக்காது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்காம பண்ணனும்னா Ctrl+C அளுத்தி வெச்சுக்கிட்டு அப்புறமா சேவ் போட்டு பாரு. புரியுதா

Saturday, March 17, 2007
ஆபிரஹாம் லிங்கனின் கடிதம்
பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த இக்கடிதம் இரண்டு நாட்கள் முன்னர்தான் அகப்பட்டது. லிங்கன் எனக்கு கடிதம் எப்படி எழுதியிருக்க முடியும் என்று யாரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். {கல்கி காலத்து கடி ஜோக் :( }. நான் விரும்பிப் படித்து சேர்த்து வைத்த குப்பையிலே, கிளறிய போது கிடைத்தது. இந்த கடிதம் லிங்கன் தனது மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதியதாகக் கூறப்படுவது. உண்மையிலேயே அத்தகைய சூழ்நிலையில் எழுதியதா அல்லது இதை ஒரு சொல் யுக்தியாகக் கையாண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் அவசியம் கூறவும்.
இங்கே அதன் தமிழாக்கத்தைத் தர முயல்கிறேன். இது கவிதையா கட்டுரையா ? நானறியேன்.சாற்றை உறிஞ்சி சக்கையை விட்டு விடுங்கள்.
அவன் கற்றேத் தீர வேண்டும், தெரியும் எனக்கு
எல்லா மனிதரும் நீதிமான் அல்லர்
எல்லா மனிதரும் சற்குணரும் அல்லர்
ஆயினும் கற்றுத் தருவீர் அவனுக்கு (உலகில்)
ஒவ்வொரு கயவனுக்கும் ஒரு கனவான் உண்டு;
ஒவ்வொரு தன்னல அரசியல்வாதிக்கும்
ஒரு தன்னலமில்லா தலைவனும் உண்டு;
கற்றுத் தருவீர் அவனுக்கு
எதிரியென்று ஒருவன் உண்டெனில்
நண்பனென்று ஒருவனும் உண்டு.
விலக்குவீர் அவனைப் பொறாமைப் பிடியிலிருந்து;
முடிந்தால் சொல்லித்தாருங்கள்
சிரிக்கும் இரகசியத்தை மௌனமாயிருந்து.
கற்கட்டும் அவன் விரைவிலேயே
துச்சரை அழிப்பது மிக எளிதென்றே,
முடிந்தால் சொல்லிக் கொடுங்கள்
நூல்களின் அருமை பெருமைகளை;
விரிந்த விசும்பின் புள்ளினங்களையும்
வெய்யிலில் திரிகின்ற தேனீக்களையும்
பச்சை மலைத்தொடரின் பூக்களையும்கண்டு
வியந்திட நேரமும் கொடுங்கள்.
பள்ளியில் சொல்லிக் கொடுங்கள்
மோசம் செய்தலைக் காட்டிலும்
தோல்வியே பெரும் கௌரவம் என்றே;
கற்றுத் தருவீர் அவனுக்கு
சுய சித்தாந்தத்தில் உறுதியுடன் நிற்க
ஊரே கூடி அதைத் தவறென்று உரைப்பினுமே;
கற்றுத்தருவீர் அவனுக்கு
மெலியருக்கு மெலியனாய்
வலியருக்கு வலியனாய் பழகிடவே.
என் மகனுக்கு
கும்பலைத் தொற்றிச் செல்லும்
கூட்டத்தை பின்தொடரா
மனவலிமைதனைக் கொடுக்க முயலுங்கள்.
கற்றுத்தருவீர் அவனுக்கு
அனைவரது வாதங்களையும் செவிமடுக்க;
ஆயின் உண்மையெனும் சல்லடையில்
அதை சலித்து நன்மைகளைத்
தேர்ந்தெடுக்கவும் அவன் அறியட்டும்.
கற்றுத்தருவீர் அவனுக்கு, முடிந்தால்
வருத்தத்திலும் சிரித்திடும் குணத்தினை;
கற்றுத் தருவீர் அவனுக்கு
கண்ணீர் என்பதில் ஏதும் வெட்கம் இல்லை;
புல்லிய நெஞ்சினரிடை வேண்டும் உதாசீனம்
வேண்டும் எச்சரிக்கை தேனொழுகும் பேர்களிடம்.
கற்றுத் தருவீர் அவனுக்கு
தினையும் புத்தித் திண்மையும்
அதிக விலை கொடுப்போர்க்கே;
ஆயின் நேயத்திற்கும் அன்பிற்கும்
என்றும் கிடையாது விலையே.
கற்றுத் தருவீர் அவனுக்கு
கும்பலின் ஓலங்களுக்கு செவிகளை மூடட்டும்
நியாயமென்று நினைப்பின் போராட நிற்கட்டும்
அன்புடன் நடத்துவீர் அவனை
ஆயின் அளவு மிஞ்சிய பரிவும் வேண்டா
பழுக்கக் காய்ச்சிய இரும்புதான்
பின்னர் உறுதியைக் கொடுக்கும்.
அவனுள் பொறுமை இழக்கத் தைரியம் வரட்டும்
அவன் தீரனாகத் திகழ பொறுமையும் இருக்கட்டும்
கற்றுத் தருவீர் அவனுக்கு எப்பொழுதும்
தன்னம்பிக்கையின் காணறியா ஆற்றலை
அதுவே கொடுக்கும் அவனுக்கு
மனித குலத்திடை நினைத்தறியா நம்பிக்கை
மிகப்பெரிய எதிர்பார்ப்பு இது
முயற்சியுங்கள் முடியும் மட்டும்.
அவனொரு நன்மகன், இன்குணன், என்மகன் !
முதலில் மொழிபெயர்ப்பை முடித்ததும் ஏதோ ஒரு நெருடல். ஆங்காங்கே தொடர்பு இல்லாதது போல் வாக்கியங்கள் காணப்பட்டன. என்னிடம் இருந்த குறிப்பு துண்டு 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி எகனாமிக் டைம்ஸ், தில்லி ! வலையில் கூகிளிட்டேன். கிடைத்தது முழு கவிதையும். என் ஊகம் சரிதான். எகனாமிக் டைம்ஸ்-காரன் இடப் பற்றாக் குறையோ, பசி தூக்கக் கலக்கமோ என்னவோ, அங்கங்கே பல வரிகளை சாப்பிட்டுவிட்டிருந்தான். ஆங்கில மூலத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

Subscribe to:
Posts (Atom)