அப்பிடீ ரவுண்டு அடிச்சுகினு, வலெயிலதாம்பா, வரும் போது ஒரு நல்ல விசயத்தப் பாத்தேன். அத்தெ அல்லாருக்கும் டமாரம் அடிச்சுட்டு போலாம்னு நிக்குறேன். சாமியோவ் ஒரு விசயம். இப்ப நா சொல்லப் போற பார்ட்டீக்கும் எனக்கும் ஒப்புராண ஒரு கனீக் ஷீனும் கெடயாது. அவுங்க நல்ல மனசோட செய்ற காரியத்த யாரச்சும் சொன்னாத்தான நாலு பேருக்கு தெரியும்ங்கிற நெனப்புல சொல்றேன். அவ்ளோதான். யாராச்சும் முன்னாடியே சொல்டாங்களா? பராவாயில்ல. இன்னொருவாட்டி கேட்டுக்க.
சரி விசயத்துக்கு வருவோம். PDS TEXT ங்கற சென்னை கம்பெனி ஒண்ணு கீது. அவுங்க ஒரு இலவச சேவை குடுக்கறாங்க. அது தான நமக்கும் வேணும். நீங்க, அவுங்க வலைத் தளத்துல பதிஞ்சுட்டா அப்புறம் ஆறு பாஷையில லட்டர் டைப் அடிச்சி அங்கனயிருந்தே அப்படியே மெய்ல் அனுப்பிடலாம். இதன்ன பெரீய்ய்ய்ய விசயம். அத்தான் ரீடிஃப் சிஃபி, ஈ-பத்ரா அல்லாரும் குடுக்குறாங்குளேன்னு சொல்றீங்களா. வித்தியாசம் இதுதாங்கோ.
இது வெறும் லட்டர் எளுத மட்டுமில்லெ. இந்த மாதிரி பெரிய பெரிய சமாசாரத்தையும் தனித்தனி ஃபைலா அங்கேயே சேவ் பண்ணிக்கலாம். அல்லாம் யூனிக்கோடு. அத்துல இதுதாங்க அட்வான்டேஜு. திரும்ப எத்தினி நா களிச்சு வந்து வேண்ணாலும் பாத்துகலாம், திருத்திக்கலாம். அட டிலீட்- டும் பண்ணிக்கலாம்.நேத்திக்கு பெங்களூரூ ல்ல பாதில விட்ட வேலயெ அடுத்த நா ஹைதராபாத்தோ டெல்லியோ எங்க வேண்ணாலும் உக்காந்து முடிச்சுக்கலாம்.
ஒரே பொட்டிக்குள்ள பல பாஷயில எளுதலாம். எப்ப வேணும்னாலும் பாஷய மாத்திக்கலாம். என்னெ மாதிரி கபீருக்காக இந்திலேயும் எளுதனும் தமிளும் எளுதனும்-ந்னு இருக்கக் கூடிய மனுசனுங்களுக்கு ஒரே பாக்ஸ்-ல ரெண்டையும் செய்ற வசதி பெரிய விசயமுங்க.
அப்புறமா, நீங்க ஒங்களோட ஃபைல் டௌன் லோடும் பண்ணிக்கலாம். லட்டர் அடிக்கும் போது சைஸ் மாத்றது, போல்ட், புல்லட் அல்லாமும் இருக்கு. அவசியப்பட்டா ஹைபர் லின்க் குடுக்கிற வசதியும் இருக்கு. இப்படீ பலான சௌகரியமெல்லம் கீது. நீங்களே போயி பாத்துக்கிடுங்க.
இன்னா வரட்டுமா? ஒடம்ப பாத்துக்குங்க. ரைட்டா !
அட, ஒரு விசயத்த மறந்துட்டம்பா. டைப் அடிக்கையில அப்பப்போ சேவ் போட்டிகினே இரு. இல்லாட்டி டைம்-அவுட் சொல்லாம பண்ணிடும். நீ பெரீசா எழுதிகீனேஏ..இருப்பெ. அர்ரெமண்நேரம் ஓடி பூடும். நீ ஜம்பமா சேவ் அழுத்தினன்னு வச்சுக்க அம்பேல். அத்தனையும் போச்சு. LOG-In. மீண்டும் வருக. அதாவது புச்சா உள்ளே நுளை ன்னு அர்த்தம். உள்ளே போனா ஒண்ணும் இருக்காது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்காம பண்ணனும்னா Ctrl+C அளுத்தி வெச்சுக்கிட்டு அப்புறமா சேவ் போட்டு பாரு. புரியுதா
3 comments:
நாட் பவுண்டு
என்று பிழைச்செய்தி வருகிறது.
சுட்டி சரியா?
முதல் தடவையே இப்படினா?
வாங்க குமார் வாங்க. கோவிச்சுக்கக் கூடாது. அந்த hyperlink Pds.text லே குடுத்தத்து. அதை ஒட்ட வைச்சப்பறம் ஒரு தடவை செக் பண்ணியிருக்கலாம். தூக்கக் கலகத்தில செய்யல. இப்ப சரி பண்ணியாச்சு.
Every time we save at pds.text it goes on adding slash \\\ inside the links.This seem to have caused the problem. Must be some softwhere problem. Thanks
Software and not softwhere!! vara vara tamilum marandu english -um maranthudum pola irukku
Post a Comment