எனக்கு எப்போதுமே மரபுசாரா எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி உபயோகத்தில் ஆர்வம் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தினத்திற்கு தினம் பெருகி வரும் மாசடைந்த காற்றும் சுற்றுச் சூழலுமே ஆகும்.
உதாரணத்திற்கு பெங்களூர் நகரில் மட்டும் 52 லட்சம் இருசக்கிர வாகனங்கள் வளைய வருகின்றன. நம் நாட்டில் மாதந்தோறும் 14 முதல் 17 லட்சம் இருசக்கிர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதன் விளைவு, ஆண்டுக்கு சுமார் 50 முதல் 60 லட்சம் டன் கரிமல வாயு வெளிப்படுகிறது.
அதன் பரிமாணம் இன்று பெங்களூர் நகரத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பம் 39 டிகிரியை தொட்டு இருக்கிறது. வெகுகாலமாக பெங்களூரில் வசிப்பவர்கள்
பத்து வருடங்கள் முன்பு வரை 34 அல்லது 35 டிகிரியே மிக அதிகம் என்று நினைத்து வந்தனர். மனம் போன போக்குபடி அடுக்கு மாடி கட்டடங்கள் எழுப்புவதும் மரங்களும் திறந்த வெளிகள் குறைந்து வருவதும் எல்லாவற்றிற்கும் மேலாக புகையையும் வெப்பத்தையும் கக்கும் வாகன நெரிசலுமே இன்றைய நிலைமைக்கு காரணம்.
இதை மாற்ற வேண்டுமானால் கச்சா எண்ணெய் உபயோகம் கட்டுக்குள் வரவேண்டும். கூடிய மட்டிலும் மின்சக்தி மூலம் வாகனங்கள் இயக்கப்படவேண்டும். இதற்கான தொழில் நுட்பம் தயாராக இருப்பினும் வணிக ரீதியில் வெற்றி பெற இன்னும் பலகாலம் ஆகும் என்று விற்பனைத்துறை வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.
இதன் முக்கிய காரணம் பாட்டரி எனப்படும் மின்கலன் திறன் குறைந்த அளவு தூரமே பயணத்திறன் கொண்டது. மேலும் அதை மின்னூட்டம் (CHARGE) செய்ய குறைந்தது 4 முதல் 6 மணி நேரங்கள் தேவை. இதனால் பெட்ரோல் வண்டிகளுக்கு பழக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள இயலாமல் மின்சார வண்டிகளை தவிர்கிறார்கள்.
நம் சாலைகளில் மின்வண்டிகள் பெருக வேண்டுமானால் ஒன்று சட்டரீதியான தடை பெட்ரோல் வாகனங்களுக்கு வரவேண்டும் ( அதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாது) அல்லது மின்வண்டி பயன்பாட்டில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்.
நுகர்வோரின் பயன்படுத்தும் முறைகளைப் பார்க்கும் போது குறைந்தது 50 லிருந்து 60 சதம் வாகனங்களை மின்கலன் துணை கொண்டே இயக்க முடியும். அதையும் சூரிய சக்தியாலே மின்னூட்ட இயலும். அதற்கு சில வசதிகளை நுகர்வோர்க்கு தயாரிப்பாளர்களோ விற்பனை முறைகளோ செய்ய முன் வந்தால் அவற்றின் பயன்பாடு கூடும். அதற்கான சாத்திய கூறுகளை கீழ்கண்ட விளக்கக் காட்சியாக தயாரித்து இருக்கிறேன்
தமிழில் படிக்க விழைபவர்கள் இங்கே சுட்டவும்
கீழே ஆங்கில மொழியில் படிக்கலாம்.
குறிப்பாக புதிய தொழிலில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் செய்ய புது முயற்சிகளை பரிந்துரை செய்யும் ஆசியர்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன். தங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.

2 comments:
நம் நாட்டில் சூரியசக்தி வீணாகி கொண்டு இருக்கிறது நீங்கள் சொல்வது போல் பயன்படுத்தினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நன்மைதான்.
மின்சார வாகனம் :- சார்ஜ் செய்யும் சைக்கிளை எங்கள் பக்கத்து வீட்டில் வாங்கினர் அவர் அதை சரியாக பயன்படுத்தாமல் பின் மூலையில் போட்டு விட்டார்.
நீங்கள் சொல்வது போல் பழக்கங்களை மற்றிக் கொள்ள முடியதவர்களாய் இருப்பதால் நடைமுறை சாத்தியம் ஆக நாட்கள் ஆகும்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
நல்வரவு கோமதி மேடம்,
சரியாகச் சொன்னீர்கள். உபயோகத்தைப் புரிந்து கொண்டபின் நம் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் தாங்கள் குறிப்பிட்டது போல் நல்ல விஷயங்கள் மூலைக்குத் தான் போகும். எல்லாமே வணிகச் சந்தையின் பிடியில் இருப்பதால் இது இழுபறி போராட்டமாய்தான் போய்க்கொண்டிருக்கும். உதாரணத்திற்கு மின்வண்டிகள் பெருகுவதை இன்றைய பெட்ரோல் வண்டி தயாரிப்பாளர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களுடைய வியாபாரம் படுத்துவிடும். டிஜிடல் காமிராக்கள் வந்த பின்னர் கோடக் நிறுவனம் புகைப்பட சுருட்களை தயாரிப்பதையே கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் காலக்கிரமத்தில் தொழில்நுட்பத்தின் கை ஓங்கியே நிற்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment