Thursday, March 31, 2011

பாதாளம் போகும் சூதாடி மாந்தர்

சமீபத்தில் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களுடைய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது. சூதாடிகள் படும் துன்பம் பற்றியது. அதைக் கண்டதும் சினா சோனா வின் ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வந்தது.

”துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடினான்” என வேடிக்கையாகக் குறிப்பிடுவது போல இருக்கும் உடமையெல்லாம் சூதாட்டத்தில் இழந்து ஓட்டைப் பீப்பாயை அரைக்கு அசைத்து போகும் சினா-சோனா ஏறக்குறைய பாண்டவர்களின் கதியை அடைந்து விட்டான்.



எல்லோரையும் எல்லாக் காலத்திலேயும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்த்தும் நல்ல கருத்து உள்ள நகைச் சித்திரம் இது.

சூதாடி மாந்தர்களின் சுக வாழ்வும் ஒரு நாளில்
பாதாளம் போகுமெனல் பாரறிந்த உண்மையன்றோ

சொல்ல முடியா துன்பக்கதை சூதாடி மனிதரின் சோகக்கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகை கள்ள வேலைகள் செய்த கதை
சிலர் கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர் அரசு உரிமை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன் அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலை பிரிய நேர்ந்ததும் ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே

( படம் : உலகம் சிரிக்கிறது 1959)

2 comments:

கோமதி அரசு said...

//நல்ல மனிதரும் வஞ்சகராகை கள்ள வேலைகள் செய்த கதை
சிலர் கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை//

எல்லா காலத்திலும் நல்லவர்கள் கெட்டவர்களால் ஏமாறும் நிலை வந்து இருக்கிறது. அப்படியும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் மக்கள்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா -இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா-தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
திருந்த மருந்து சொல்லடா

சூதாடி அனைத்தயும் தொலைத்தாலும் மறுபடியும் விட்டதை சம்பாதிக்க வேண்டும் என்று மறுபடியும் சூதாடத் தான் செய்வான்.

பட்டுக்கோட்டை குருட்டு உலகமடா பாட்டில் எப்படி எல்லாம் வஞ்கர் ஏமாற்றப் பார்ப்பார்கள் அதை புரிந்து அவர்களிடமிருந்து விலக வேண்டும் என்று பாடி இருக்கிறார்.

கருத்துள்ள நகைச் சித்திரத்தயும், பட்டுக்கோட்டை பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கபீரன்பன்.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்,

//திருட்டு உலகமடா-தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
திருந்த மருந்து சொல்ல //

பட்டுக் கோட்டையார் பாடல்கள் என்றுமே பொருள் பொதிந்தவை. எளிமையில் இனிமை

நம் துரதிருஷ்டம் அவர் வெகுநாட்கள் வாழ்ந்து மேலும் நல்ல பாடல்களை அளிக்க முடியாமல் போனது.

அவருடைய நல்ல பாடல் வரிகளை எடுத்து காட்டியதற்கு நன்றி.