சமீபத்தில் என்னுடைய pen drive ஐ ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று ரைட்-ப்ரொடெக்ட் ஆகி விட்டது. அதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.
பெரும்பாலோர் இதை வைரஸ் என்று கூறினர். அதன் பின் பல நாட்கள் பல மென் பொருள் நிபுணர்களிடம் காட்டி பலவாறான வைரஸ் மென்பொருட்கள் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. புரியாத கோளாறாகவே இருந்தது.
சில வலைக் குழுமங்கள் இந்தப் பிரச்சனைக்கு பல்வேறு வழிகள் சொல்லியிருந்தன. ஒரு சில, புதிய மென்பொருளை நிறுவி பின்னர் வைரஸை ஒழிக்க வழி சொல்லின. பல புரியவில்லை, சில வேலை செய்யவில்லை. சரி format செய்து விடுவோம் என்றால் 'you don't have right to format' என்று திரும்பத் திரும்ப பூச்சாண்டிக் காட்டியது.
அப்போது ஒரு அன்பர் இதை லினக்ஸ்-ல் திறந்து பார்த்து format செய்து விடலாம் என்றார். நம்பிக்கைத் துளிர்த்தது. லினக்ஸ் பாஷை விண்டோஸ் வைரஸ்க்கு தெரியாதாமே! ஃபோல்டரை திறக்க முடிந்தது பார்க்க முடிந்தது. ஆனா formatting ?
அதிலேயும் மண். என்னங்க பாஷை வேறெ ஆயிட்டா வியாதி போயிடுமா ன்னு ஒருத்தர் கிண்டலும் பண்ணினார்.
சரி போச்சா 4 GB pen drive அப்படீன்னு வெறுத்து கிடந்த நேரத்துல ஒரு நாள் திடீரென்று சகோதரன் ’இந்தா format பண்ணியாச்சு’ ன்னு தூக்கி முன்னாடி போட்டான்.
பெங்களுர் டவுன் ஹால் அருகில் ஆந்திரா பாங் மாடியில் ஏதோ ஒரு நிறுவனம் இதை இலவச சேவையாக செய்வதாகச் சொன்னான். மனிதர்களின் வியாதிகளுக்கு இலவச வைத்தியம் பார்ப்பவரை தெய்வமென்போம். இவர்களையும் அந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியது தான் என எண்ணிக் கொண்டேன்.
பின்னர் ஒரு நாள் அதனுடைய job card ஐக் காண நேர்ந்தது. கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று பார்த்தால் Accel Frontline என்கிற பெரிய நிறுவனம் என்று புரிந்தது.
பெங்களூர் அன்பர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி 41231496. அவர்கள் Transcend தயாரிப்புகளுக்கு இந்த சேவை தருவதாக சொல்லக் கேள்வி.
எல்லா தயாரிப்புகளுக்கும் பொருந்தக் கூடிய கை வைத்தியம் இருந்தா யாராவது சொல்லுங்க. புண்ணியமா போவும் ! ஏனென்றால் இந்த வியாதி திரும்பத் திரும்ப வரக்கூடியது.
தெய்வமா உங்களை வாசகர்கள் கும்பிடுவார்கள்.