Sunday, February 28, 2010

நல்லாப் பாடுறே ! கொஞ்சம் உச்சரிப்பு....

வண்ண மயமான விளக்குகள் ஒளியூட்டிய மேடையிலே உயிரைக் கொடுத்து “உயிரே உயிரே” என்று அந்த சிறுமி பாடி கொண்டிருக்கிறாள். பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசு என்றால் சும்மாவா!

“கேக்க சகிக்கில. சேனலை மாத்து” அப்படின்னு தம்பி. அவனுக்கு ஜேக்கி-சான் படம் பார்க்கணும்

ரிமோட்டை கையில பிடித்துக் கொண்டிருக்கும் அக்காவோ “போடா ஒனக்கு பாட்டு வராது, புரியாது....”

ஆமாமா, நீ மட்டும் பெரிசா பாடிக் கிளிச்சியாம். அந்த பாட்டு டீச்சர், ’சுருதியே சேரல உங்கப் பொண்ணுக்கு’அப்படீன்னு அம்மாகிட்ட மூஞ்சில் அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்களே. எங்களுக்குத் தெரியாத உங்க பாட்டு லட்சணம்..

இது ஓயாத சண்டை. சண்டை நடுவில பாட்டை விட்டாச்சு, ஜட்ஜஸ் ரவுண்ட் வந்தாச்சு.

ஜட்ஜ் கள் அந்த சிறுமியை பார்த்து, ஒப்புக்காக

”நல்லா பாடினே, கொஞ்சம் மாடுலேஷன்ல கவனம் வேண்டும்”

”உன் காஸ்ட்யூம் சூபர், யூ ஹேவ் வொண்டர்புல் ப்ரஸன்ஸ். கொஞ்சம்..கொஞ்சம் உச்சரிப்பை சரியா பார்த்துகணும். வல்லினம் மெல்லினம் எல்லாம் தெளிவா இருக்கணும்.”

இத்யாதி இத்யாதி..

”தேங்க்யூ மேடம்.... ஓகே ஸர்... என்று சொல்லிக் கொண்டு வந்த டென்ஷன் சிறுமிக்கு தான் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றதுமே அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவளை விட அவள் தாயாருக்கு கோபம் அதிகமாயிற்று. அங்கேயே விவாதம் சூடு பரக்க ஆரம்பித்தது. சஸ்பென்ஸை தொடர்வதற்காக சேனல் தயாரிப்பாளர் பிரேக் கொடுத்தாரோ நாம பிழச்சோமோ :)))

இந்த மாதிரி நேரத்துலதான் நினைவுக்கு வருவார் சினா-சோனா.


IT IS DIFFICULT TO
ESTEEM A MAN
AS HIGHLY AS
HE WOULD
WISH

யாவருமே அவரவர் நினைப்பில் பெரிய ஆர்டிஸ்ட்தான், படிப்பாளிதான். ஆனால் பிறர் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ன ?

அதற்கான தகுதி, உழைப்பு, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் அங்கீகாரத்திற்காக அவசரப்படும் போது பிறருடைய நகைப்பு ஆளாகி விடுகிறார்கள்.

இதைதான் ஆங்கிலத்தில் “sitting in his own ivory tower" என்கின்றனரோ! அப்போது வளர்ச்சி நின்று போகிறது.

2 comments:

கோமதி அரசு said...

அதற்கான தகுதி, உழைப்பு, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் அங்கீகாரத்திற்காக அவசரப்படும் போது பிறருடைய நகைப்பு ஆளாகி விடுகிறார்கள்.//

அன்னையின் வாக்கு தான் நினைவுக்கு வருது.

வாழ்க்கை என்பது இயக்கம்.வாழ்க்கை என்பது முயற்சி. முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் ஒரு அடியாகும்.

முயற்சி,உழைப்பு, பொறுமை இருந்தால் ஒரு நாள் வெற்றி பெறலாம்.

இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றியை மட்டுமே சந்திக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். தோல்வியை தாங்கும் மனதிடம் இல்லை. தோல்வியே வெற்றிக்கு அடித்தளம் என்று குழந்தைகளை உற்சாகப்ப்டுத்தி ஊக்கப்ப்டுத்தி அடுத்தகட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

KABEER ANBAN said...

//தோல்வியை தாங்கும் மனதிடம் இல்லை. தோல்வியே வெற்றிக்கு அடித்தளம் என்று குழந்தைகளை உற்சாகப்ப்டுத்தி ஊக்கப்ப்டுத்தி அடுத்தகட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்//

உண்மைதான் கோமதி மேடம். அந்த மனோதிடம் பெற்றவர்களுக்கே இல்லாமல் போவதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

மிக்க நன்றி