Tuesday, January 12, 2010

வீரத்துறவியின் சலியா வழி



இலக்கு ஒன்றை தேர்ந்திடு
இரவும் பகலும் உழைத்திடு

இலக்கு அதுவே வாழ்க்கை
இலக்கு அதுவே கனவாம்

நாடி நரம்பு மூச்செல்லாம்
நாடி நிற்கட்டும் நும் இலக்கு

அணுஅணுவும் உயிர்க்கட்டும்
அனுதினமும் உந்தன் இலக்கு

வெற்றிக்கு இல்லை வேறுவழி
பற்றுவோர்க்கு வெற்றியே, வாழி
!

Take an idea, make that one idea your life; think of it, dream of it, live on idea. Let the brain muscles nerves everyy part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way to success. - swami vivekananda

இன்றைக்கு இளைஞர் தினமாகக் கொண்டாடப்படும் விவேகானந்தர் பிறந்தநாள் சமர்ப்பணம்.
(thanks to " ibibo.com” for
picture courtesy)

Friday, January 1, 2010

மனம் விட்டு சிரியுங்கள்

புது வருடம் சந்திர கிரகணத்தில் துவங்கியது. அடுத்து வரும் அமாவசையன்று -இன்னும் பதினைந்து நாளில் சூரிய கிரகணம் வேறாம். அடுத்தடுத்து இப்படி கிரகணங்கள் வருவது நல்லது இல்லையாம், பொழுது போகாதவர்கள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் இதை வைத்தே காமெடி பண்ண ஒருத்தருக்கு தெரிஞ்சிருக்கு [2002 லேயே :))]

புது வருடத்தை சந்தோஷமாக ஆரம்பிக்கலாமே என்று இந்த பதிவு. ஆங்கிலத்திலே இருந்தாலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை. இதை அனுப்பி வைத்த புண்ணியவான் வாழ்க.



[படத்தை சொடுக்கி முழுபக்கத்தில் திறந்து படிக்கவும். எஞ்சாய் ]

மக்குப் பையன் ஒருவன் கிரகணங்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறான்.

What is eclipse of the moon ?
Shadow of earth on the moon is known as eclipse of the Moon

What is eclipse of the Sun ?
Shadow of moon on the sun is known as eclipse of the Sun.

எவ்வளவு முறை படித்தும் பாவம் பையனுக்கு எதனுடைய shadow எதன் மேல் என்பதில் குழப்பம் வந்து கொண்டே இருந்தது. moon... earth.... sun.. என்று மாற்றி மாற்றி உளறிக் கொண்டிருந்தான். பொறுமை இழந்த அவனுடைய தந்தை

வாட் ஈஸ் எக்ளிப்ஸ் ஆஃப் தெ எர்த் ? என்று கேட்டார்.

எக்ளிப்ஸ் ஆஃப் எர்த்தா ??? இன்னும் குழம்பிப் போனான் மக்குப் பையன்.

ஷேடோ ஆஃப் ஸன் ஆன் தெ எர்த்து " விளக்கினார் தந்தை

சன்னுக்கு ஷேடோவா ?

ஷேடோ ஆஃப் மை ஸன் (my son) ஆன் தெ எர்த்து என்று நொந்து போனார் மனிதர் :))))

{கன்னடத்து சாகித்ய உலகில் புகழ் வாய்ந்த D.P.கைலாஸம் அவர்களின் நகைச்சுவை துணுக்கு இது]