இத்தாலி நாட்டில் பிறந்த ஒருவர் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க முடிந்தால், இப்பெரிய ஜனநாயக நாட்டில் பிறந்தவர் சிறிய நாடான டென்மார்க்கின் சுற்றுசசூழல் பாதுகாப்பு மந்திரியாக பதவி ஏற்க முடியாதா ?
”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்” என்ற வரிகளை நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை கீழ் கண்ட படங்களைப் பார்த்துவிட்டால்.
டால்பின்களை கொன்று குவிக்கும் டென்மார்க் தேசத்தின் குரூரமான விளையாட்டு பற்றி இன்றைய மின்னஞ்சலில் செய்தியை பார்த்த உடனேயே இதை வலைப்பக்கத்தில் போட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.
சிவந்த மண் படத்தில் ஸ்பெயின் நாட்டு காளை விளையாட்டுக் கொலை கண்ட போது வந்த அருவருப்பு இப்போது பதைபதைப்பாக மாறி விட்டது. ஒரு ஜீவனை அணுவணுகாக கொலை செய்வது விளையாட்டிலும் வீரத்திலும் சேர்த்தியா ? கடவுளே :((((
மனிதர்களுடன் நட்பை விரும்பும் மிக அருமையான கடல் ஜீவன்கள் டால்பின்கள். சிறு குழந்தைகளும் ஆனந்தமாய் கட்டிப்புரண்டு நீந்தி விளையாடும் தோழமை படைத்தவை அவை. டால்பின்களால் மனிதர்களுக்கு எவ்வித கெடுதியும் இல்லை. நட்போடு நெருங்கி வரும் அப்பாவி உயிர்களை குத்திக் கொலை செய்வதா ! இது நம்பிக்கைத் துரோகம்.
டால்பின்களின் உயிர் சீக்கிரம் போவதில்லையாம். அவைகளின் மரண ஓலம் பிறந்த குழந்தையின் அழுகையை போலக் கேட்குமாம். சிவ சிவா!!
விஞ்ஞானத்தில் முன்னேறியும் (?) அன்பிலா வாழ்க்கையினால் என்ன பயன்? இவர்கள் கையில் கிடைக்கும் விஞ்ஞானமும் அழிவிற்கே பயன்படும் என்ற பயமும் ஏற்படுகிறது.
மேனகா காந்தியை டென்மார்க் நாட்டின் மந்திரியாக்குவதற்கு வழியுண்டா சொல்லுங்கள்