Showing posts with label மின்கலன். Show all posts
Showing posts with label மின்கலன். Show all posts

Monday, September 26, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும்-4



எப்பொழுது  எங்கள் ”மாலை 2 காலை ” மின் பற்றாக்குறைக்குக் காரணம்  குளிர்பதனப் பெட்டி என்று எனக்கு எண்ணம் ஏற்பட்டதோ  அப்போழுதே  அதற்கான பரிகாரம் தேட ஆரம்பித்தேன்.

இப்பொழுதெல்லாம்  நட்சத்திர குறிப்புடன் திறம் மிக்க  குளிர்பதனப் பெட்டிகள், அறை குளிரூட்டல், தண்ணீர் காய வைத்தல் போன்ற சாதனங்களுக்கு  வந்திருப்பதால்  நம்முடைய பழைய எந்திரங்களின்  திறனை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்ததில்  என்னுடைய ஃபிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டி கிட்டத்தட்ட  மூன்று மடங்கு சக்தியை உபயோகித்துக் கொண்டிருந்தது.