Sunday, August 24, 2014

பாட்டரி ஸ்கூட்டரும் பணமிச்சக் கணக்கும்

இன்று எப்படியாவது, ஒரு  மாெக்கைபை் பதிவாவது, இட்டே தீருவது என்ற பிடிவாதத்துடன் அமர்ந்துள்ளேனே். மணி மதியம் இரண்டு. காரணம் ஆண்ட்ராய்டில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி.

பதிவுக்கான தலைப்பு : என்னுடைய பாட்டரி ஸ்கூட்டரும் பண மிச்சக் கணக்கும்
2008 ஆம் ஆண்டு இரு சக்கிர வாகனம் வாங்க வேண்டிய நிலையைில் சுற்றுப்புற சூழ் மாசு குறைப்பு நல்லெணெ்ணத்துடன் பாட்டரியில் இயங்கும் வாகனம் ஒன்றை வாங்கினேன். மூன்று நான்கு கிமீ தூரங்களுக்கு காரில் செ ்ல்வது சமூகக் குற்றமாக மனம் உறுத்தியது.
பாட்டரி வாகனச் செலவு விவரங்கள் படி -பாட்டரி விலை மற்றும் அதை சார்ஜ் செ ய்ய ஆகும் செ லவுகளைசை் சேர்த்தால் - ஒரு கி மீ க்கு 70 காசுகளக்கும் குறைவைாக இருக்கும். அன்றய தேதேியில் 8000ரூ பாட்டரிக்கான காசு சுமார் 12000 கிமீ ஓட்டினாலே தேறேி விடும் .ஒரு நாளை க்கு பத்து பதினைஞ்சு கிமீ ஓட்டினாலே ரெண்டு வருஷத்துல காசை எடுத்திறலாம்  அதுக்கப்புறமும இன்னும் ஏழெ ட்டாயிரம் கிமீ ஓடும் என்றெல்லாம் மனக்கணக்கு  போடப்பட்டது.
2014 ல் முதன்முறை யாக பாட்டரி மாற்ற வேண்டிய கட்டாயம்.
[ இதுக்கு மேலே ஆண்ட்ராய்ட் தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏற்கனவே  ஒரு மணி நேரத்துக்கும் மேலேயே ஆச்சு. அதனால் மடிக்கணிணிக்கு வந்தாச்சு . மேலே உள்ள தவறுகளெல்லாம்  தட்டச்சு மென்பொருளில் உள்ள பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்டது ]

ஆறு வருஷம் பாட்டரி வேலை செஞ்சிருக்கா ! அப்படீன்னு மூக்கு மேலே விரலை வைத்தவர்கள் பலர். ஆனால் என் வரவு செலவு கணக்கு எனக்குத் தானே தெரியும்.
ஆறு வருஷத்துல வண்டி ஓடிய தூரம் 6200 கிமீ மட்டுமே. இன்றைய தேதியில் பாட்டரி மாற்றத்திற்கான செலவு ரூ 16800/  பெட்ரோல் ஸ்கூட்டர் கணக்குப்படி ஒரு கிமீக்கு ரூ 1.40 வைத்துக் கொண்டால் என்னுடைய பழைய பாட்டரிக்கான காசு தேறி விட்டது. ஆனால் ஓட்டச் செலவில் மிச்சம் எதுவும் இல்லை. இப்பொழுது பொருத்தியிருக்கும் புது பாட்டரிக்கான செலவை தேற்ற வேண்டுமானால் அதை 12000 கிமீ ஆவது ஓட்டியாக வேண்டும். இப்போது பொருத்தப்பட்டிருப்பதோ சீனாக்காரன் சரக்கு. அது இரண்டு வருடமாவது தாங்குமா என்பதே சந்தேகம்.
 பிள்ளையாண்டான் விரட்டினான். “இதுக்குத் தான் சொல்றேன் அதை பேசாம வித்துடு. இதனாலெ பிராப்ளம் தான் அதிகம். எப்பப் பார்த்தாலும் சார்ஜ் இருக்கான்னு கவலை.  வெளியே போனா வீடு வரைக்கும் அது நம்மை இழுத்துகிட்டு வருமா இல்லை நாம அதை தள்ளிகிட்டு வருவோமா-ங்கறதே பெரிய கூத்து. அதுல சாதாரண ஸ்கூட்டருக்கான எகானமி கூட வரமாட்டேங்குது. யாராவது ஃப்ரீயா எடுத்துகிட்டு போனா கூட குடுத்திடலாம்....” இத்யாதி இத்யாதி.

அவன் வாயை நான் எப்படி அடைத்தேன்? “ இதே 6200 கி.மீ க்கு  என் கார்  ஓடியிருந்தால் எனக்கு 450 லிட்டர் பெட்ரோல் செலவாயிருக்கும். ஐந்து வருட சராசரி விலையாக லிட்டருக்கு ரூ 65 வைத்துக் கொண்டாலும் ரூ 29250/ செலவாயிருக்கும்.  அதிலே ஒரு சிறிய பகுதியைதானே செலவழிக்கிறேன். அதிகம் உபயோகித்தால் அதிகமாக மிச்சமாகும். உபயோகிக்காமலே வைத்திருந்தால் எதுவும் துருப்பிடிக்கத்தானே செய்யும்.....”( நான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்!)

இப்போ ஒரு துணுக்கு: 
மூச்சு இரைக்க இரைக்க வீடு வந்த கணவனைப் பார்த்து
மனைவி : என்ன ஆச்சு உங்களுக்கு, ஏன் மூச்சு இரைக்குது?
கணவன் : அடீ ! இன்னைக்கு  அஞ்சு ரூபா மிச்சம். பஸ்ஸில ஏறாம பஸ் பின்னாடியே ஓடி வந்தேனாக்கும் !!
மனைவி : கடவுளே ! ஐம்பது ரூபாய் மிச்சம் பண்ணியிருக்கலாமே
கணவன் :  எப்படி ?
மனைவி : ஓடறதுதான் ஓடறீங்க ...பஸ் பின்னாடி ஓடாம டாக்ஸி பின்னாடி ஓடி வந்திருந்தா  அம்பது ரூபா மிச்சமாயிருக்குமா இல்லையா?
கணவன் :?????
[ இதை மேலே நான் சொன்னக் கணக்குக்கு முடிச்சுப் போட்டுக் கொள்வதும் கொள்ளாதது வாசகர் இஷ்டம்]
எப்படியோ பாட்டரி மாற்றி வந்தாச்சு. ஆறு வருடங்களில் 450 லிட்டர் பெட்ரோல் விளவாக ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு டன்னுக்கும் மேலான கரியமில வாயு வெளியேற்றத்தை தடை செய்த என் சமூகப் பணி இன்னும் தொடரும்...:)))