மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வல்லரசுகள் தங்களுடைய வல்லமையைக் காட்சிப்படுத்தவும் ஆளுமையை நிலை நாட்டவும் முயற்சிப்பதில் முதல் பலி உலக அமைதி.
ஐக்கிய நாடுகள் என்கிற அமைப்பில் வல்லரசுகளின் ஆதிக்கம் மேலோங்கி அதனை செயலிழக்கச் செய்து வருகின்றன. அதன் தோற்றத்திற்குக் காரணமான இரண்டாம் உலகப் பெரும் போரின் போதே மனம் வெதும்பிய டிவிஜியின் பாடல்கள் இரண்டை பார்ப்போம். இன்றைக்கும் இவை பொருத்தமாக உள்ளன.
1)ಮುತ್ತಿರುವುದಿಂದು ಭೂಮಿಯನೊಂದು ದುರ್ದೈವ ।
ಮೃತ್ಯು ಕುಣಿಯುತಲಿಹನು ಕೇಕೆಹಾಕುತಲಿ ॥
ಸುತ್ತಿಪುದು ತಲೆಯನನುದಿನದ ಲೋಕದ ವಾರ್ತೆ ।
ಎತ್ತಲಿದಕೆಲ್ಲ ಕಡೆ? - ಮಂಕುತಿಮ್ಮ ॥ 11॥
புவிதனை பீடிக்குதே துர்தேவதை இன்று
குதித்தாடும் காலனின் கேளிக்கை சிரிப்பு
மதிசுற்றும் அனுதினம் உலகோர் துயர் கேட்டு
முடிவேது இதற்கெல்லாம் - மக்குத் திம்மா
ಮೃತ್ಯು ಕುಣಿಯುತಲಿಹನು ಕೇಕೆಹಾಕುತಲಿ ॥
ಸುತ್ತಿಪುದು ತಲೆಯನನುದಿನದ ಲೋಕದ ವಾರ್ತೆ ।
ಎತ್ತಲಿದಕೆಲ್ಲ ಕಡೆ? - ಮಂಕುತಿಮ್ಮ ॥ 11॥
புவிதனை பீடிக்குதே துர்தேவதை இன்று
குதித்தாடும் காலனின் கேளிக்கை சிரிப்பு
மதிசுற்றும் அனுதினம் உலகோர் துயர் கேட்டு
முடிவேது இதற்கெல்லாம் - மக்குத் திம்மா
2) ಮಾನವರೋ ದಾನವರೋ ಭೂಮಾತೆಯ ತಣಿಸೆ ।
ಶೋಣಿತವನೆರೆಯುವರು ಬಾಷ್ಪ ಸಲುವುದಿರೆ? ॥
ಏನು ಹಗೆ! ಏನು ಧಗೆ! ಏನು ಹೊಗೆ! ಯೀ ಧರಣಿ ।
ಸೌನಿಕನ ಕಟ್ಟೆಯೇಂ? - ಮಂಕುತಿಮ್ಮ ॥ 12 ॥
ಶೋಣಿತವನೆರೆಯುವರು ಬಾಷ್ಪ ಸಲುವುದಿರೆ? ॥
ಏನು ಹಗೆ! ಏನು ಧಗೆ! ಏನು ಹೊಗೆ! ಯೀ ಧರಣಿ ।
ಸೌನಿಕನ ಕಟ್ಟೆಯೇಂ? - ಮಂಕುತಿಮ್ಮ ॥ 12 ॥
மனிதரோ வல்லசுரரோ ? பூமாதா குளிரவே
கண்ணீரின்றி செந்நீர்தனை சொரிவரே
ஈதென்ன பகை, புகை வெம்மை? இவ்வுலகு
கசாப்பு மேடையோ- மக்குத் திம்மா I
(செந்நீர் = இரத்தம்)
முதற்பாடல் பொருள் நேரடியானது. இரண்டாவது பாடலில் பூமித்தாய் குளிர்தல் என்ற கருத்தை எடுத்துக் கொள்கிறார். பிற உயிர்களின் துயரம் கண்டு கண்ணீர மல்கும் அன்பினால் மட்டுமே பூமித்தாய் மகிழ்ச்சி அடைவாளே ஒழிய பிறருக்கு துன்பம் உண்டாக்கும் பகைமையினால் அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக 'கசாப்பு மேடை' என்ற உதாரணத்தை வைத்து விளக்குகிறார்
வல்லரசுகள் இப்பொழுது வல் அசுரர்களாகவே காட்சி அளிக்கின்றன.
மனித குலத்தின் சுயநலப் பிடிவாதங்களே இம்மாதிரியான போரட்டங்களுக்கு மூலக் காரணமாகிறது.
(Click the image to read the poem)
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதே அல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே
என்கிற தாயுமானவரின் உயர் சிந்தனையை உலகோர் எட்டும் நாள் எந்நாளோ?

